அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழகத்தின் மூன்று பெருநகரங்களில் இரண்டுவாரகாலத்தில் அதிகாரவர்கம் மிரண்டு போகும் வகையில் உணர்வுபூர்வமாக களத்தில் உழைத்த அனைத்துசகோதர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
மதுரையில்......
காவல்துறை பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிட்டநிலையில் போராட்டத்திற்கு 100க்கும் குறைவான வாகனங்களில்தான் மக்கள் வருவார்கள் என்ற உளவுதுறையின் கணக்கை நம் கருப்புவெள்ளை போராளிகள் தகர்த்து 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் தொடர்ந்து அணிவகுத்து போராட்டகளத்திற்கு வந்ததால் மதுரையின் அனைத்துபகுதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது ...
தமுமுக,மமகவின் போராட்ட வியூகங்களை இதுவரை அறிந்திடாத மதுரைமாநகர காவல்துறை
மேடைக்கு தடைபோட்டது.......
கண்டெய்னர் லாரியை மேடையாக மாற்றினோம்....
வயதுமுதிர்ந்த
கைகுழந்தைகளோடு களத்திற்கு வருகின்ற தாய்மார்களுக்காக வைத்திருந்த நாற்காலிகளை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துசென்றார்கள்......
கைகுழந்தைகளோடு களத்திற்கு வருகின்ற தாய்மார்களுக்காக வைத்திருந்த நாற்காலிகளை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துசென்றார்கள்......
எடுத்துச்சென்ற நாற்காலிகள் எடுத்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் இல்லைஎன்றால்...
வரக்கூடியவாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆங்காங்கே சாலைகள்மறிக்கப்படும் என அறிவிப்பு செய்தோம் ....
மக்கள் களத்தில் திரள
தொடங்கினார்கள்
தொடங்கினார்கள்
நாற்காளிகள் தாமாக வந்தது,
இளைஞர் அணி சகோதரர்கள் களமிரங்கினார்கள்
களத்தில் இருந்து காவல்துறையினர் விலகி பார்வையாளர்களாக மாறினார்கள்,
மக்கள்வெள்ளத்தால் நிறைந்தது போராட்டக்களம்....
நெல்லை ஏர்வாடியில் இருந்து வந்திருந்த சிறைவடிவ வாகனம் அனைவரையும் ஈர்த்தது
பெண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது
தங்களின் உடல்ஊனத்தை பற்றி கவலைப்படாமல் 17ஆண்டுகாலம் சிறைகளில்வாடும் சமுதாய உறவுகளுக்காக சக்கரநற்காலிகளில் வந்த சகோதரர்களை பார்த்தவுடன் திரண்டிருந்த மக்கள் அல்லாஹ்அக்பர் என்று முழக்கங்களை அதிரவிட்டார்கள்..
நிகழ்ச்சிகள் துவங்கின...
நிகழ்ச்சிகளை தமுமுக மாநில செயலாளர் பழனி பாருக் தொகுத்து வழங்குவார் என பொதுச்செயலாளர் அறிவிப்பு செய்தார்,
இறைவசனத்தில் துவங்கி தமுமுக, மமக மாநில நிர்வாகிகளும் சிறப்புஅழைப்பாளர்களும் உரையாற்றினார்கள்
கூட்டத்தில் பேசிய அருண்சவ்ரி அவர்கள் நீண்டகாலமாக சிறைவாசிகளை விடுதலை செய்யகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது, இனி சிறை உடைப்பு போராட்டங்கள்தான் நடத்த வேண்டும் என்றார்
வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள்
சிறையில் நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் இருப்பதற்கு முஸ்லிம்கள் என்ற காரணமல்ல அவர்கள் முஸ்லிம்களுக்காக போராடினார்கள் என்பதுதான் காரணம் என்றார்
ஹென்றி டிபென் அவர்கள்
சிறைகைதிகளுக்கான விடுதலை என்ற ஒற்றை கோரிக்கையை வைத்து ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி இந்தநாட்டிலேயே போராட்டம் நடத்திய அரசியல் அமைப்பு மனிதநேயமக்கள்கட்சி மட்டும்தான் அதற்காக நான் முதலில் மமகவிற்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன் என்றார்
கொளத்தூர் மணி அவர்கள்
இந்த நாட்டில் தேசதந்தை காந்தியை கொன்ற கோட்சேவிற்கெல்லாம் விடுதலை வழங்கி இருக்கிறார்கள்
ராஜீவ்காந்தியை கொன்றதாக சொல்லப்படுபவர்களை வெளியே விட மறுக்கிறார்கள்
என்றார்
என்றார்
உரைகளுக்கு இடையே ...
பழனி பாருக் , சிவகாசி முஸ்தபா ஆகியோர்களின் கோரிக்கை முழக்கங்கள் வின்னை பிழந்தது
பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது அவர்கள்
சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும், கோவைகலவரம்,இராஜிவ் கொலைவழக்கில் இழைக்கப்பட்ட அநிதீகளை பட்டியலிட்டார்
இந்த போராட்டம் முடிவல்ல இதுதான் துவக்கம் சிறைகதவுகள் திறக்கப்படும் வரை எங்கள் போராட்டம் ஒயாது என்றார்
இறுதியாக பேசிய மூத்ததலைவர் ஹைதர் அலி அவர்கள்
முஸ்லிம் சிறவாசிகளின் அவலங்களையும் சங்பரிவாரிகளுக்கு காட்டப்படும் சலுகைகளையும் பட்டியலிட்டார்
மதுரை மாநகர காவல்துறைக்கு
தனக்கே உரித்தான பாணியில் எச்சரிக்கை விடுத்தார்
தனக்கே உரித்தான பாணியில் எச்சரிக்கை விடுத்தார்
எங்களை ஒடுக்கநினைத்தால் அந்த காவல்துறை அதிகாரியின் சட்டைகழட்டப்படும் என்றபோது திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது......
மீண்டும் முழக்கங்களுடன்
கருப்பு வெள்ளை பட்டாளம்
கலைந்தது........
கலைந்தது........
மதுரை மிரண்டது......
களத்தில் உழைத்த அனைத்து சகோதர்களுக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்க பிராத்திக்கிறேன்
-------- பழனி பாருக் ,தமுமுக ---------
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.