இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, February 11, 2016

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.

ஏக இறைவனின் திருப்பெயரால்.....

ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.

1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.

2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது.

3. புதிய வட்டாட்சியர் அலுவலர் அலுவலகம் கட்ட ரூ.2 கோடி பெற்று தந்தது.

4. ஆம்பூர் அரசு மருத்துவமனையை தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தியது.

5. மின்னூர் மற்றும் வெங்கடசமுத்திரம் ஊராட்சிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக கொண்டு வந்தது.

6. கிரிசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியது.

7. மாதனூர் ஒன்றியம் அரிமலை-கொல்லகொட்டாய் ஆத்துப்பாலம் ரூ.5 கோடியில் அமைத்தது.

8. ஆலங்காயம் ஒன்றியம் மேலகுப்பம் -இளையநகரம் ஊராட்சிகளை இணைக்கும் தரைப்பாலம் ரூ.47 இலட்சத்தில் அமைத்தது.

9. ஆம்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ.55 இலட்சத்தில் கட்டியது.

10.மின்னூர் தொழிற்பேட்டை அறிவித்தது(2012-2013 பட்ஜெட்)

11.சோமலாபுரத்தில் 110 துணை மின்நிலையம் ஆம்பூர் நகர மக்களுக்காக 6.50 கோடி செலவில் அமைத்தது

12.ஆம்பூர் நகர காவல் நிலையம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு முதலமைச்சரிடம் 55 இலட்சம் நிதி பெற்று தந்தது

13.பேருந்து வசதி இல்லாத பல்வேறு கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தந்தது

14.சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 கோடிக்கு குடிநீர் வசதி,நியாய விலைக்கடை,நூலகம்,அங்கன்வாடிகள்,மகளீர் சுயஉதவிக்குழு கட்டிடம் மருத்துவமனை கட்டிடங்கள்,சாலை வசதி,மாணவர்களுக்கு பென்ச் மற்றும் இருக்கைகள் தொகுதி முழுவதும் செய்து கொடுத்தது

15. 5ஆண்டுகளில் 3000-க்கும் மேற்பட்டோருக்கு புதிய குடும்ப அட்டைகள் பெற்று தந்தது

16. 2012-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் முகாமில் ஒரே நாளில் 936 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெற்று தந்தது

17. 20க்கும் மேற்ப்பட்ட சிறிய கோவில்களுக்கு புனரமைப்பு நிதியாக ரூ.50,000/- வீதம் தந்தது.

18.மின்னூர்,மலையாம்பட்டு,கொல்லமங்கலம் போன்ற பெரிய ஏரிகளை ரூ. 1.65 கோடியில் தூர் வாரி, சுத்தப்படுத்தியது

19.நாய்க்கனேரி,பனங்காட்டேரி மலைப்பகுதிகளுக்கு மலைவாழ் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சாலை அமைத்தது

20. ஆம்பூர் தொகுதி முழுவதும் ரூ.27 கோடிக்கு தார் சாலைகள் அமைத்தது.

21.மண்டல நூலகம் கட்டுவதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இடம் கிடைக்காமல் நிலுவையில் உள்ளது

22.ஆம்பூர் நகரில் சிறுபான்மை மாணவர்கள் நலவிடுதி அமைத்தது

23. 20 கோடியில் ஆம்பூர் நகரம் முழுவதும் 275 புதிய மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளது

கோரிக்கை வைக்கப்பட்டு பரிசீலினையில் உள்ள திட்டங்கள் :
--------------------------------------------------------
1.ஆம்பூர் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பது தொடர்பாக

2.ஆம்பூரில் சார்நிலை கருவூலம் அமைப்பது தொடர்பாக

3.அகரம்சேரி -மேல் ஆலந்தூர் ஆற்றுத்தரைப்பாலம்

4.மின்னூர் -வடகரை ஆற்றுத்தரைப்பாலம்

5.மாதனூர் புறக்காவல் நிலையம் அமைப்பது.

6.ஆம்பூர் ஆனைமடகு அணை தூர் வாரி,ஆழப்படுத்தி அகலப்படுத்துதல்.

சட்டமன்ற உறுப்பினர் நிதி வருடத்துக்கு இரண்டு கோடி வீதம் ஐந்து வருடத்துக்கு பத்துக்கோடி நிதி எங்கேனு கேட்ட சில முட்டாள்களுக்கு இதன்மூலம் தெரிவிப்பது என்னவென்றால் பத்துக்கோடி மட்டுமல்ல கூடுதலாக சட்டமன்றத்தில் தனது சிறப்பான உரைகளின் மூலம் தமிழக அரசிடமிருந்து பெற்று தனது தொகுதிக்கு செலவீடப்பட்ட தொகை 106 கோடிக்கு மேல் என்பதை மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேல் கூடுதலாக பத்து மடங்கு நிதி பெற்று தன் தொகுதிக்கு வழங்கியுள்ளார் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா,MLA.

#தாய்கழக_போராளிகள்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.