இறைவனின் திருப்பெயரால்....

Pages

Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Tuesday, April 27, 2010

அமெரிக்காவில் கடும் சூறாவளி புயல் 10 பேர் பலி.

அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 10 பேர் பலியானார்கள்.உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வீடுகள், வர்த்தக நிறுவனங்களின் மேற் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.


மரங்கள் அடியோடு பெயர்த்து எறியப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாக்டாவ் என்ற பகுதியில் 5 பேரும், யாஸூ நகரில் 4 பேரும், ஹோம்ஸ் பகுதியில் ஒருவரும் சூறாவளிக்கு உயிரிழந்தனர். சூறாவளிக்கு யாஸூ நகர் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மிஸிஸிபி மாகாணத்தில் 15 நகரங்கள் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன