சென்னை: கோயில் உண்டியலை உடைக்க முயன்றதாக சிறுவனை
போலீசார் பிடித்து சென்றனர். நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய
இன்ஸ்பெக்டர், அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியபோது திடீரென
வெடித்து குண்டு பாய்ந்தது. அவனது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தென் சென்னை
பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால்
குற்றவாளிகளை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. குறிப்பாக நீலாங்கரை காவல்
நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி செயின்பறிப்பு, வழிப்பறி,
கோயில் உண்டியல் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதையடுத்து,
போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Showing posts with label வெடிப்பு. Show all posts
Showing posts with label வெடிப்பு. Show all posts
Thursday, January 9, 2014
முஸ்லீம் சிறுவன் வாயில் துப்பாக்கி வைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியபோது குண்டு பாய்ந்தது!
Posted by
ADIRAI TMMK
at
9.1.14
Monday, March 14, 2011
ஜப்பான்: 3வது அணு உலை வெடிப்பு
Posted by
ADIRAI TMMK
at
14.3.11
| திங்கட்கிழமை, 14, மார்ச் 2011 (8:39 IST) ஜப்பான்: 3வது அணு உலை வெடிப்பு ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இந்த சோகங்கள் நீங்காத நிலையில் இப்போது அணுக் கதிர்வீச்சு அபாயம் அந்நாட்டை சூழ்ந்துள்ளது. வடக்கு ஜப்பானின் ஃபுகிஷிமா அணு நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அணுக் கதிர் வீச்சு பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. அணு உலையில் ஆபத்து காலத்தில் செயல்பட வேண்டிய குளிர்விப்பான் செயலிழந்ததால் அணு உலை வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள 3வது அணு உலையில் குளிர்விப்பான் செயலிழந்ததால் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே 1 வது அணு உலை வெடித்ததில் ஏற்பட்ட அணுக் கதிர் வீச்சு பரவியது. இதனால் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த அணு உலையின் மேற்கூரை மற்றும் சுற்றுச் சுவர் வெடித்தது. இந்த அணு உலையைச் சுற்றி 1.70 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| |||||||||||||||||||
Subscribe to:
Posts (Atom)