இறைவனின் திருப்பெயரால்....

Pages

Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Tuesday, April 6, 2010

மார்க்கம் பேணும் விளையாட்டு வீரர் யூஸுஃப் பதான்!



இன்றைக்கு காசுதான் பிரதானம். மற்றவை சர்வசாதரணம் என்ற எண்ணுடத்துடன் வாழும் முஸ்லிம்களுக்கு மத்தியில், என்ன திறமை இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது குதிரை கொம்பான விஷயமாக இருக்கும் இன்றைய காலத்தில், அதிலும் ஒரு முஸ்லிம் தனது திறமையால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இளைஞன் யூஸுஃப் பதான், மதுபானம் தொடர்பான விளம்பர "லோகோ' அணிவதில்லை என்று துணிச்சலாக முடிவு எடுத்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி மட்டை பந்து வீரர் யூஸுஃப் பதான். தற்போது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் அதிவேக சதம் அடித்த பெருமைமிக்க இவர், மதுபானம் தொடர்பான விளம்பரங்களை தனது சட்டையில் அணிவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதற்கேற்ப டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, தனது சட்டையில் இருந்த "கிங்பிஷர்' நிறுவன "லோகோவை' துணியால் மறைத்து களமிறங்கினார். "கிங்பிஷர்' நிறுவனம் "பீர்' போன்ற மதுபானங்களை தயாரித்த போதும், கிரிக்கெட்டிலும் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு அணிகளுக்கு "ஸ்பான்சராக' உள்ளது. தவிர, ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளது.

இந்நிலையில் அணியின் மற்ற வீரர்கள் "கிங்பிஷர்' லோகோவை அணியும் போது, யூசுப் மட்டும் மறுப்பதற்கு அவரது மதநம்பிக்கை தான் முக்கிய காரணம். இளம் பருவத்தில் பரோடாவில் உள்ள மசூதியில் வளர்ந்த இவர், இஸ்லாமிய நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இது குறித்து யூசுப் கூறுகையில்,""கிங்பிஷர் என்பது மதுபான வகையை சேர்ந்தது. இதனை உட்கொள்வதோ அல்லது அதற்காக விளம்பரம் செய்வதோ எனது மதநம்பிக்கைக்கு எதிரானது,''என்றார்.

இது பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,""யூசுப் சிறப்பாக ஆடி வருகிறார். "லோகோ' தொடர்பான இவரது முடிவு பெரிய விஷயம் இல்லை. இதற்கு நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்காது,''என்றார்.

கிரிக்கெட் அரங்கில், இதற்கு முன் தென் ஆப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா "கேசில் லேகர்' என்ற மதுபானத்தின் "லோகோவை' சட்டையில் அணிய மறுத்தார். இதற்கு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டும் அனுமதி அளித்தது. இவரது வழியில் யூசுப் பதானும் மதுவுக்கு எதிரான தனது கொள்கையில் உறுதியாக உள்ளார்.

Friday, April 2, 2010

14ம் ஆண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழா

அதிராம்பட்டினத்தில் 14ம் ஆண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழா ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.


அதிராம்பட்டினம, லாவண்யா திருமண மண்டபத்தில், அதிரை வள்ளல் அண்ணாவியார் குலப் புலவர்கள் ஹாஜி காதிர் முகைதீன் அரங்கத்தில் விழா நடைபெறுகிறது.


இன்று மாலை 4 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத் தலைவர் தமிழ்மாமணி முனைவர் அ.அய்யூப் தலைமை தாங்குகிறார்.


இஸ்லாமியப் பாடல்களை இசையருவி, தமிழ்மாமணி சென்னை குமரி அபூபக்கர், கலைமாமணி ஹாஜி குல்முஹம்மது ஆகியோர் பாடுகின்றனர்.


வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் தொடக்க உரை நிகழ்த்துகிறார்.அதன் பின்னர் பல்வேறு நூல்கள் வெளியிடப்படுகின்றன.


இரவு 7 மணிக்கு மகளிர் அரங்கம் நடைபெறுகிறது. இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக மகளிர் பிரிவுத் தலைவர் பேராசிரியர் நசீமா பானு தலைமை தாங்குகிறார். சென்னை முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நசீமா சிக்கந்தர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.


ஏப்ரல் 4ம் தேதி சனிக்கிழமையன்று பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் இடம் பெறுகின்றன. இதில், இக்கால இலக்கியங்கள் என்ற தலைப்பிலான அமர்வில், முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை நசீமா சிக்கந்தர், திருமறை – நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் என்ற தலைப்பில் பேசுகிறார்.


சனிக்கிழமை மாலை நாலரை மணிக்கு ஊடகங்கள் சமுதாயத்தைச் சீராக்குகின்றனவா சீரழிக்கின்றனவா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில், சீராக்குகின்றன என்ற தலைப்பில் பேராசிரியை நசீமா சிக்கந்தர், முனைவர் நத்தர்சா, பேராசிரியர் செய்யது முகம்மது கபீர் ஆகியோரும், சீரழிக்கின்றன என்ற தலைப்பில் முனைவர் அகமது மரைக்காயர், சவ்தா உம்மாள், ஹிதாயத்துல்லா ஆகியோரும் பேசுகின்றனர்.


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் விழா நிறைவுப் பேருரையாற்றுகிறார்.

Thursday, April 1, 2010

அயோத்திக்கு போனேன்! மனம் கலங்கினேன்! பாபர் மஸ்ஜித் நிலத்தில் தமுமுக தலைவர்!






தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக் கழகத்தின் தலைவர் பேரா சிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். உத்தரபிர தேசத்தின் தலைநகர் லக்னோவில் கடந்த மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 21வது பொதுக் குழுவில் அவர் கலந்து கொண்டார். பிறகு மார்ச் 22 அன்று அயோத்திக்கும் மார்ச் 23 அன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கும் மார்ச் 24 மற்றும் 25 அன்று டெல்லிக்கும் சென்று விட்டு தமிழகம் திரும்பினார். தமுமுக தலைவர் தனது வட இந்திய பயணம் குறித்து மக்கள் உரிமைக்கு அளித்த சிறப்பு பேட்டி:

மக்கள் உரிமை: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 21வது பொதுக்குழு எப்படி அமைந்திருந்தது?

பேராசிரியர்: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொது குழுக்கூட்டம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இந்த அமர்வில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் புதிய உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் தனியார் சட்ட வாரியத்தின் பல்வேறு குழுக்களின் செயற்பாடுகள் குறித்த அறிக்கைகள் பற்றிய விவாதம் முதலிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த முறை முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுக்குழு லக்னோவில் உள்ள புகழ்பெற்ற தாருல் உலூம் நத்வத்துல் உலமா என்னும் நத்வா பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நடைபெற்றது. லக்னோ நகரம் முழுவதும் இதற்காக விழா கோலம் பூண்டிருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாரியத்தின் கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களை வரவேற்க வரவேற்பு வளைவுகளும், தட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. நத்வாவில் உள்ள மாணவர் தங்கும் விடுதிகளில் வாரிய உறுப்பினர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனக்கு சுலைமானிய விடுதியில் அறை ஓதுக்கப்பட்டிருந்தது. ஒரு நவீன பல்கலைகழகத்திற்கு இணையாக பல்வேறு துறைகளுக்கு தனித்தனி கட்டிடங்கள், நூலகத்திற்கு என்று தனி கட்டிடம், புல்வெளித் தோட்டம், கூட்ட அரங்கம், வளாகத்தின் நடுவில் கம்பீரமாக பள்ளிவாசல் என்று பிரமாண்டமாக இருந்தது நூற்றாண்டு கண்ட நத்வா வளாகம். நத்வா மாணவர்கள் மிக இனிமையாக சேவை மனப்பான்மையுடன் விருந்தினர்களை உபசரித்தார்கள்.

கேள்வி: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
பதில்: இந்த கூட்டத்தில் மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்புச் சட்டம் 2009&ஐ தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. லிபரான் ஆணைய அறிக்கை தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நடவடிக்கை அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளுக்கு வகுப்பு கலவர தடுப்புச் சட்டத்தின் மூலம் பரிந்துரை காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டம் காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் மிதமிஞ்சிய அதிகா ரம் அளிக்கும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. இச்சட்டம் இல்லாத நிலையிலேயே குஜராத் கலவரம் நடைபெற்றிருக்கும் போது இச்சட்டம் அமுலுக்கு வந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இச்சட்டத்தை தற்போதைய வடிவத்தில் கொண்டு வரவேண்டாம் என்று பிரதமரிடம் வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் புரிந்து வரும் அராஜகத்தை தடுத்து நிறுத்த இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மாணிக்கப்பட்டது. இஸ்ரேலின் உளவுப்படையான மோசாதுடன் இந்திய உளவுப்பிரிவு நெருங்கிய உறவு கொண்டிருப்பதையும், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்த விஷயத்தில் இந்தியா அடிபணிவதும் கண்டிக்கப்பட்டது. நேரு காலத்திய வெளியுறவு கொள்கையின் அடிப் படையில் இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

லிபரான் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ள 68 நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மாணிக்கப்பட்டது. பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பது ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. அப்பாவி இளைஞர்கள் சிறையில் வாடுவதும், போலி என் கவுண் டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப் படுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தீர்மானிக் கப்பட்டது.

திருமணங்களின் போது ஆடம்பரங்களை தவிர்த்து எளிமையாக நடத்த வேண்டும் என்றும் வரதட்சணை இல்லாமல் திருமணங்கள் நடத்தப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்தியும், சிறிய பிணக்கு களுக்காக திருமணத்தை முறித்துக் கொள்வதை தவிர்க்குமாறும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்த பொது அமர்வின் போது 5 பெண்கள் உட்பட 50 பேர் கொண்ட வாரியத்தின் செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எம்.ஹாசிமும் இவர்களில் ஒருவர்.

இந்த அமர்வின் போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டம் குறித்தும் அது குறித்த தமிழக முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு குறித்தும், இது தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகனுடன் நடத்திய பேச்சு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பொது அமர்வின் தீர்மானங்களை விளக்கி லக்னோ ஈத்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.
கேள்வி: தங்களின் அயோத்தி பயணம் குறித்து சொல்லுங்களேன்...!

பேராசிரியர்: பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு 1980&களில் சென்றிருக்கிறேன். இப்போது மீண்டும் இடிப்பிற்கு பிறகு சென்றேன். பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் உள்ளது உள்ளபடியே உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக நீதிமன்றம் நியமித்துள்ளவர்களில் ஒருவரான பைசாபாத்தைச் சேர்ந்த காலிக் அஹ்மது என்னை ‘சர்ச்சைக்குரிய” பகுதிக்கு அழைத்துச் சென்றார். அவர் நான் வருவது குறித்து முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தார். செல் போன், கேமரா, பேனா, காகிதம் என்று எதுவும் எடுத்துச் செல்லாமல் சென்றோம்.

பல இடங்களில் பலத்த சோதனைக்குப் பிறகு இரும்பு வேலிகளுக்கு நடுவே நடந்து 450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமாக இருந்த பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தை நெஞ்சில் பெரும் துயரத்தை சுமந்தவனாக பார்த்தேன். நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வர உள்ளது என்றும் பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை நடத்தும் வழக்குரைஞர் ஜபர்யாப் ஜெய்லானி லக்னோவில் என்னிடம் சொல்லியிருந்தார்.

தீர்ப்பு சாதகமாக அமைந்து அடுத்த முறை பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ஏக இறைவனை தொழும் வாய்ப்பு எனக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த வண்ணமாக அந்த இடத்தை பார்த்தேன். நானும் என்னுடன் லக்னோவில் இருந்து வந்த எனது நண்பர் மட்டுமே அங்கு தாடியுடன் இருந்தோம். பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில் அமைந்திருந்த தற்காலிக கோயில் அருகே நடுநிலையுடன் இருக்க வேண்டிய காவல்துறையினர் ராம் லாலாவை தரிசனம் செய்யுங்கள் என்று அனைவரையும் பார்த்து (எங்களையும் சேர்த்து தான்) கூறிக் கொண்டிருந்தனர். மொத்த இடத்தையும் பார்ப்பதற்கு அரை மணிநேரம் எடுத்தது. தற்போது போடப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு டிசம்பர் 6, 1992&க்கு முன்பு போடப்பட்டிருந்தால் பள்ளிவாசலை காப்பாற்றியிருக்கலாம். குதிரைகள் லாயத்தை விட்டு தப்பிய பிறகு லாயத்தை பூட்டி என்ன பலன் என்ற சிந்தனை திரும்ப திரும்ப வந்துக் கொண்டிருந்தது. அயோத்தி பண்டையக் காலங்களில் புத்தர்களின் வழிப்பாட்டு தலமாக, இந்துக்களின் வழிப்பாட்டுத் தலமாக இருந்தது போல் அது முஸ்லிம்களின் நகரமாக இருந்தது என்பதற்கான தடயங்கள் அங்கு ஏராளமாக உள்ளதை நேரில் பார்க்க முடிந்தது. அயோத்தியை சுற்றிய 12 கி.மீ. சுற்றுப்பரப்பில் பல பள்ளிவாசல்கள் உள்ளன. இது தவிர இரட்டை நகரமான பைசாபாத் மற்றும் அயோத்தியை இணைக்கும் சாலையின் இரு புறத்திலும் ஏராளமான பள்ளிவாசல்களும் முஸ்லிம் அடக்கத்தலங்ளையும் பார்க்க முடிந்தது.

அயோத்தியின் மக்கள் தொகையான ஒன்னரை லட்சத்தில் 6 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு 35 பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகின்றது. பாபரி மஸ்ஜிதை சுற்றி அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை சுற்றியும் பள்ளிவாசல்களை பார்க்க முடிந்தது. அனுமன்கிரி கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் 40 ஏக்கர் பரப்பளவு உள்ள முஸ்லிம் அடக்கத்தலம் உள்ளது. இங்கு 12 அடி நீளமுள்ள ஒரு அடக்கவிடம் (கப்ரு) உள்ளது. இது முதல் மனிதர் நபி ஆதமிற்கு பிறகு வந்த நபி ஷீத் அவர்களுடையது என்று உள்ளூர் முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர். (இங்கு படம் எடுத்துக் கொண்டோம்)

இன்னும் பல அடக்கவிடங்கள் உள்ளன. பாரசீக மொழியிலான கல்வெட்டுகளும் அதில் உள்ளன. இவையெல்லாம் அயோத்தி முஸ்லிம்களின் நகரமாகவும் தொன்மை தொட்டு விளங்கி யுள்ளது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளன.


இறுதியாக பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் முதல் மனுதாரர் ஹாசிம் அன்சாரியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இவருக்கு வயது 92. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர் தான் அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி. (பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர்). 1949ம் ஆண்டு டிசம்பர் 22 வரை பாபர் பள்ளிவாசலில் இரவு தொழுகை வரை நடை பெற்றது. பிறகு நள்ளிரவில் தான் பள்ளிவாசலுக்குள் ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, ஹனுமான் சிலைகள் வைக்கப்பட்டன. அன்று முதல் இவர் வழக்காடிவருகிறார். காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடுகிறார்.

காங்கிரஸ் ஆதரவு முஸ்லிம் தலைவர்களையும் இவர் வன்மையாக கண்டித்தார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது பூட்டா சிங் பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்குமாறும் அதற்காக 3 கோடி ரூபாயும், பெட்ரோல் பங்கும், இவரது மகனுக்கு அரசு வேலையும் தருவதாக ஆசைவார்த்தை காட்டியதாகவும், ‘எடு பழைய செருப்பை' என்று கூறி அவரை விரட்டியதையும் ஆவேசத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். தென் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் பாபரி பள்ளிவாசலுக்காக காட்டும் ஆர்வம் தன்னை நெகிழ வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

என்னை அயோத்திக்கு அழைத்துச் சென்ற நண்பர் காலிக்கிடம் என்னைப் போல் சாதாரண முஸ்லிம்கள் பாபரி வளாகத்திற்குள் சென்று பார்க்கலாமா என்று கேட்டேன். அது இயலாத காரியம் என்று அவர் பதிலளித்தார். முஸ்லிம்கள் வந்தால் அவர்கள் கடுமையாக சோதிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார். மேலும் தென் இந்திய முஸ்லிம் தலைவர்களில் நீங்கள் தான் முதன் முதலாக இங்கே உள்ளே சென்று பார்த்து உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

பாபரி மஸ்ஜித் பற்றியும் அயோத்திப் பற்றியும் ஆய்வு செய் வதற்காக ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார் நண்பர் காலிக். பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அயோத்தியில் வக்ப் செய்யப்பட்ட இடங்களை, கப்ருஸ் தான்களை சில சுயநலமிகள் விலைக்கு விற்கும் அவலமும் நடைபெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்தார். என்னுடன் லக்னோவில் இருந்து கார் ஒட்டி வந்த இளைஞர் சில மாதங்களுக்கு முன்பு தான் பார்த்தபோது கப்ருஸ் தானாக இருந்த இடம், தற்போது கட்டிடமாக கட்டப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக அயோத்தி ரயில் நிலையத்தில் அலிகர் செல்வதற்காக கைபியத் எக்ஸ்பிரஸ் பிடிப்பதற்காக நின்ற போது லக்னோவில் இருந்து என்னுடன் வந்திருந்த எனது நண்பர் டாக்டர் அனீஸ் சொன்ன சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கரசேவை என்ற பெயரில் பாபர் பள்ளிவாசலை இடிப்பதற்கு கரசேவகர்கள் ரெயில் மூலம் தான் அயோத்திக்கு வந்தார்கள். அப்போது நரசிம்மராவ் அமைச் சரவையில் ரெயில்வே அமைச்சராக இருந்தவர் சி.கே. ஜாபர் ஷரீப். இவர் அயோத்திக்கு செல்லும் ரெயில்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிறுத்தி யிருந்தால் ஆயிரக்கணக்கில் கரசே வகர்கள் அயோத்திக்கு வந்திருக்க முடியாது.

இதேபோல் அவர் சொன்ன இன்னொரு செய்தி என்னை உறைய வைத்தது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அன்று பிரதமரை சந்தித்த குழுவில் நானும் இடம் பெற்றேன். அதற்கு முன்பு சுலைமான் சேட் சாஹிப் அவர்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுவோம் என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஆனால் அவரது ஆலோசனையை சையத் சகாபுதீன், ஜாபர் ஷரீப் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் கேட்க மறுத்துவிட்டார்கள். இதைக் கேட்ட நான், சமூக நலனை விட பதவி பெரிது என்று இந்த இருவரும் எண்ணியதால் அதன் பிறகு அவர்கள் எம்.பி.களாக ஆகவே முடியவில்லை என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போது கைபியத் எக்ஸ்பிரஸ் நிலையத்திற்குள் வந்து விட்டது.


கேள்வி: அலிகர் பயணம் எப்படி அமைந்திருந்தது?

பேராசிரியர்: அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் எனது நண்பர்கள் பலரை சந்தித்தேன். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பி.கே. அப்துல் அஜீஸ் அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு பதிலளிக்கும் போது நாங்கள் சேர்ப்பதற்கு தயார்.
இந்த முறை தமிழ் நாளிதழ்களில் கூட விளம்பரங்கள் பிரசுரித்திருந்தோம். ஆனால் தமிழக மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில்லை என்றார். மருத்துவம், பொறியியல், மேலாண்மையியல், இதழியல் உள்பட பல்வேறு பாடங்களை குறைந்த செலவில் படிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் தமிழக மாணவர்கள் இங்கே வருவதில்லை என்று அங்கு சந்தித்த காரைக்காலை சேர்ந்த முனை வர் பட்ட ஆய்வு மாணவர் ஜக்கரியா குறைபட்டுக் கொண்டார். இவர் இங்கு முதுகலை அரபி படித்து விட்டு தற்போது இஸ்லாமிய அறிவியல் துறையில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துக் கொண்டிருக்கிறார். அன்று மாலை அலிகர் ஜமாஅத்தே இஸ்லாமி வட்டம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன். தமிழகத்தில் தமுமுக ஆற்றி வரும் பணிகளை அறிந்து அலிகர் மக்கள் வியந்து போனார்கள்.கேள்வி:

டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு எப்படி இருந்தது?

பேராசிரியர்: சிறுபான்மை அமைச்சக கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் உள்ள தமிழக செய்தியாளர்களை தமிழக இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர்களிடம் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அவசியம் என்ற தமுமுகவின் நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னேன். சமூக நீதிக்கு குரல் கொடுக்க வேண்டிய திராவிட கட்சிகள் தங்கள் கடமையை மறந்து விட்ட நிலையில் வட இந்தியாவில் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் லாலு பிரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை சென்னைக்கு அழைத்து பெரும் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதையும் அதற்காக நான் டெல்லியில் நடத்திய சந்திப்புகளையும் பகிர்ந்து கொண்டேன். அப்போது ஒரு முக்கிய தமிழ் நாளிதழின் டெல்லி செய்தியாளர் மார்ச் 7, 2007ல் நீங்கள் டெல்லியில் நடத்திய பேரணியில் காணப்பட்டது போல் மக்கள் திரளும் ஒழுங்கும் நிறைந்த பேரணியை நான் இதுவரை பார்க்கவில்லை என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

சமீபத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக இடதுசாரிகள் நடத்திய பேரணியையும், சில முஸ்லிம் அமைப்புகள் மிஸ்ரா ஆணையம் தொடர்பாக நடத்திய பேரணியையும் தமுமுக நடத்திய பேரணியுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமானும் இதே கருத்தை என்னிடம் லக்னோவில் பதிவுச் செய்ததை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். டெல்லியிலும் நீங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

Tuesday, March 30, 2010

முஸ்லிமாக மாறிய பெண் கைது

<span title=இலங்கையில் முஸ்லிம்கள் மூன்றாவது பெரிய சமூகத்தினர் ஆவர்"


இலங்கையில் முஸ்லிம்கள் மூன்றாவது பெரிய சமூகத்தினர் ஆவர்


புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார்.


சாரா மாலினி பெரேரா என்ற இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டதாகவும், அவற்றில் ஒன்றான ‘இருளிலிருந்து ஒளியை நோக்கி’ என்ற நூலில், தான் எதற்காக தனது மதநம்பிக்கையை மாற்றிக்கொண்டார் என்று அவர் விபரித்துள்ளதாகவும் அப்பெண்ணின் பஹ்ரெய்னில் உள்ள சகோதரி ஒருவரை மேற்கோள் காட்டி கல்ப் டெய்லி நாளேடு செய்திவெளியிட்டுள்ளது.


மூன்று மாத விடுமுறையில் தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றிருந்த சாரா மாலினி அங்கிருந்து இந்த நூல்களில் சிலவற்றை வெளிநாடுகளுக்கு பார்சல் சேவை மூலமாக அனுப்புவதற்கு சென்றிருந்தபோது, அங்கு கடமையிலிருந்த பௌத்த தேசிய வாதக்கட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்நூலைப் பற்றி பொலிசாருக்கு அறிவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சாரா மாலினி கைது செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி கூறியுள்ளார்.


கொழும்பு புறநகர்ப் பகுதியொன்றின் பொலிஸ் நிலையத்தில் இந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


தேசத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான செயல்களில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என பொலிஸ் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.


80களின் நடுப்பகுதியிலிருந்து வளைகுடா நாட்டில் சாரா மாலினி பெரேரா வசித்து வருவதாகவும் 1999ம் ஆண்டில் இந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் சகோதரிகளும் கூடவே இஸ்லாத்துக்கு மதம் மாறியுள்ளதாகவும் கல்ஃப் டெய்லி செய்தி கூறுகின்றது.


பெளத்த தேசியவாதம் தற்போது மேலோங்கியுள்ள சக்தியாக விளங்கும் இலங்கையில், பெளத்தவாதக்கட்சியொன்று அரசாங்கத்தின் பங்காளியாகவும் உள்ளது.


இலங்கையின் சனத்தொகையில் மூன்றாவது இனக் குழுவாக விளங்கும் முஸ்லிம்கள், அரசியல் பொருளாதார சமூகக் கட்டமைப்பில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.


ஆனால் அங்கு புத்த மதத்தவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்ற சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, March 28, 2010

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்ற பெரியார்தாசன் பேட்டி

"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)

நிருபர்:நீங்கள் சவுதி வந்த பின்னர்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்களா?



பெரியார்தாசன்: பிப்ரவரி 26 அன்று நான் சவுதி வந்தேன் ,9 மாதங்களுக்கு முன்பாக ரியாத் தமிழ் சங்கத்தில் சிறப்புரையாற்ற வந்தேன்.



இஸ்லாத்திற்க்கும் சவுதி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது 10 வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட முடிவு. 2000 வருடத்திலிருந்து நான் இஸ்லாத்தை ஆராய்ந்து வந்தேன்.



கம்பளிபூச்சி எவ்வாறு கூட்டுக்குள் இருக்கும் காலத்தில் முடியெல்லாம் உதிரிமோ, அதேபோல் என் அறியாமை வெளியே வந்தது.



என்னுடைய பெயர் ஷேசாத்திரி, என்னுடைய சிறு வயதில் நண்பர்கள் இருந்தார்கள், நாங்கள் சென்னை பெரம்புரில் உள்ள RCC பள்ளியில் படித்தோம். 1 முதல் 11 வரை படித்தோம். 1963 வருடம் முடித்தோம்.


இப்பொது ஒருவர் பிரபல பேச்சாளராக இப்போது இருக்கிறார், இன்னொருவர் இப்பொழுது கல்கி பகவானாக இருகிறார், சிராஜூத்தீன் என்ற நண்பர் இப்பொழுது அபுதாபியில் மார்க்க பேச்சாளராக இருகிறார்கள்.



இவர்களை சந்திப்பதற்க்கு எங்களுடைய பள்ளி ஆசிரியர் ஜனதனன் மூலம் 2000 வருடம் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று துபாய் சென்றேன். அப்போது அபுதாபில் இருக்கும் சிராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவன் என்னுடை சிறுவயது நண்பன் என்பதால் நாங்கள் வாடா போடா என்றுதான் பேசிக் கொண்டோம்.


இறுதில் விடைபெறும் போது அவன் கூறியது "எந்த குழந்தையும் இறை மறுப்பாளனாக பிறப்பதில்லை. எந்த மனிதனும் இறக்கும் போது இறை மறுப்பாளராக இருக்கக் கூடாது" என்று கூறியது என்னை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்தியது. அடுத்தநாள் புத்தாண்டு கூட கொண்டாடவில்லை.



இறைவன் இருக்கிறானா அல்லது இல்லையா? நான் 45 வருடங்களாக இறைவன் இல்லை என்ற பிரச்சாரம் செய்தவன். இது 2000 வரை நடந்தது. இறைவன் இல்லாமல் இருந்தால் நல்லது என்று எண்ணினேன். ஏன் என்றால் நான் நாத்திக பிரச்சாரத்தின் மூலம் பல பேரை வழி கெடுத்து இருக்கிறேன்.



2000 முதல் நாத்திகத்தை நிறுத்தி விட்டு இறைவனை தேட ஆரம்பித்தேன். ஹிந்து வேதங்கள், இதிகாசங்கள், தேவாரம், புராணம், திருவாசகம் ஆகியவற்றை படித்தேன். இதில் நான் தேடிய விடைகள் கிடைக்க வில்லை. ஏற்கனவே எனக்கு தெரியும் ஏனென்றால் நான் 5 வயதிலிருந்தே நான் இவைகளை படித்து வந்து இருக்கிறேன். நான் அடிக்கடி சொல்வதுண்டு 'இந்து மரபுக்கும் இந்திய தத்துவ மரபுக்கும் எந்த தொடர்பும் இல்லை'. இந்து வேதத்தின் படி பிள்ளை குட்டியை பெற்றவன் கடவுளாக இருக்க முடியாது.



அடுத்ததாக 3 பரிசுத்த ஆவி, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, நடுஏற்பாடு என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்து பவுத்தத்தில் நான் கேட்டேன், அதில் நான் கடவுளை பற்றி கேட்டதற்க்கு 'மரத்தில் உள்ள இலைகளை எல்லாம் பார்க்க முடியாது, கையில் உள்ள இலையை மட்டுமே பார்க்க வேண்டும்' என்று கூறினார்கள். அவர்களை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, மார்க்கத்தை ஏற்பதைப் போல் ஆகாது.



2007 வரை நான் குர்ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை நான் படித்தேன், அது என்னை பக்குவப்படுத்தியது. எனக்குள் ஒரு முழுமையான முடிவுக்கு வந்தேன் இறைவனுக்கு இணை வைக்ககூடாது. அந்த இறைவன் தான் ரஸு(ஸல்) அவர்களை இறுதி தூதராக அனுப்பி வைத்தான். அவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு தொழுகையில் தெரிய வேண்டும். ஒருவரையொருவர் பின்பற்றி ஒரு சமூகமாக தொழ வேண்டும் அது தொழுகை.



மேட்டை உடைத்து பள்ளத்தில் போட்டு காணாமல் போய்விட்ட செய்திகள் தெரியும் என்பதாலே ஜகாத் கொடுப்பதில் மூலம் வறுமையின் உயிரை நசுக்கி விட முடியும் என்பதாக நான் உணர்ந்தேன்.

அடுத்து நோன்பு எந்த துன்பம் வந்தாலும் இறைவனுக்காக தாங்கி கொள்ளுகிற 30 நாள் பயிற்சி என்பதாக நான் புரிந்து கொண்டேன். ஹஜ் என்பது ஒரே இலக்கை நோக்கி உலகமே வரவேண்டும் என்பதற்காக தான்.



இந்த திருக்குர்ஆன் இறக்கப்பட்டது. அதன் படி ரஸூ(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் அமையப் பெற்றது. அழகிய முன்மாதிரியாக இறக்கப்பட்ட திருக்குர்ஆனை மட்டும் நான் ஏன் தேர்வு செய்தேனென்றால் அதில் 300 வருடம் இல்லாதது இருக்கு. மற்றவற்றில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று உள்ளது. ஆனால் இது இறக்கப்பட்ட காலத்திலிருந்தே இன்றைக்கு வரைக்கும் மாற்றமில்லாமல் இருக்கிறது, என்பது ஒன்றே எனக்கு பெரிய சாட்சியாக உள்ளது.



அங்கே உலகத்தின் எல்லா தரப்பு மக்களும் பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன், அழகன், அழகில்லாதவன் ஆண், பெண் எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் அந்த இலக்கை நோக்கி வருகிறார்கள். ஊதியம் இல்லாத அவ்வளவு பெரிய வணக்கஸ்தலத்தை ஒன்று இறைவன் கட்டி இருக்க வேண்டும் இல்லையென்றால் ஒரு கேணப்பய கட்டி இருப்பான் ஏன்னா இவ்வளவு பேரை ஒரே இடத்தில் கூட்டி இருந்தால் எவ்வளவு வசூல் பண்ணி இருப்பார்கள்.



2007லிருந்து 2010 வரை மெல்ல மெல்ல இஸ்லாத்தின் பால் வந்தேன். 'துலுக்கன்கிட்ட பணம் வாங்கிவிட்டு இவன் பேசுறான்' என்று பல பேர் பேசுவார்கள், 2007 வருடம் ஆரம்பித்த இந்த தேடல் இறைவனுக்கும் எனக்கும் மட்டுமே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். அறிவித்த சில மணி நேரங்களில் நான் மக்காவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதனால்தான் மக்காவில் வைத்து நான் முஸ்லிம் ஆனதை அறிவித்தேன். நான் இந்த முறை என்னுடை சொந்த செலவில் இங்கு வந்துள்ளேன்



நிருபர்: நண்பர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க விரும்புகிறீர்களா?



பெரியார்தாசன்:நண்பர்கள் நம்மை அலட்சியப்படுதுவார்கள், அல்லது இலட்சியப் படுத்துவார்கள், நாம் முதலில் பழகும் போது நன்றாக பழகுவார்கள் பிறகு அலட்சியப்படுத்துவார்கள், அதனால் நான் நண்பர்களை இப்போது அழைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.



நிருபர்: குடும்பத்தில் வேரு யாராவது இஸ்லாத்தில் இணைந்துள்ளார்களா?



பெரியார்தாசன்:என் வீட்டில் மனைவியிடம் நான் இஸ்லாத்தை ஏற்ற விசயத்தை நான் கூறினேன் அதற்கு அவள் அதிர்ச்சி அடைந்தாள், பிறகு கூறினால் நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் மாறுவீர்கள் பவுத்தனா மாறுவீர்கள், முஸ்லிமா மாறுவீர்கள் அதற்காக நானும் மாறவேண்டுமா? என்று கேட்டாள், அதன் பிறகு நான் கூறினேன் நான் இஸ்லாத்தை ஏற்றதற்கு காரணம் இருக்கு. நீ ஒன்றை மனதில் வைத்துக் கொள் 'மறு உலக வாழக்கை என்ற ஒன்று உள்ளது அதை நம்பு' என்று சொல்லி விளக்கினேன் சிறிது நேரம் கழித்து அவளும் ஏற்றுக் கொண்டாள்.



நிருபர்:வீட்டில் வேருயாராவது இஸ்லாத்தில் இணைந்துள்ளார்களா?



பெரியார்தாசன்:பேரக்குழந்தைகள் நான் சொன்னால் கேட்பார்கள் அவர்களும் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார்கள்.




Let us try to Boycott American & Israeli Products for the sake of Allah.



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


'அடியார்கள் ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் இரண்டு வானவர்கள் இறங்காமல் இருப்பதில்லை. அவ்விருவரில் ஒருவர், இறைவா! (உன் வழியில்) செலவு செய்யும் ஒருவருக்கு பொருளை வழங்குவாயாக!' என்று கூறுவார். மற்றொருவர், 'இறைவா! செலவழிக்காமல் இருக்கும் நபருக்கு நீ அழிவை வழங்குவாயாக' என்று கூறுவார்'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி,முஸ்லிம்

நன்றி

ஹளித் ஹசன்






Wednesday, March 17, 2010

டாக்டர் அப்துல்லாஹ் உடன் நேர்காணல்





இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் தமுமுக இணையதளத்திற்காக அளித்த நேர்காணல்.

சந்திப்பு: எம். ஹூஸைன் கனி, நூர் முஹம்மது, ஆசிக் இக்பால்.
டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க
தொகுப்பு: tmmk

Monday, March 15, 2010

அப்துல்லாஹ் பேட்டி வீடியோ காட்சிகள்

Part 1



Part 2



Part 3



Part 4

உம்ராவில் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

சகோதரர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) புனித உம்ரா கடமையை நிறைவேற்றியபோது எடுக்கப்பட்ட படங்கள்.

அல்லாஹு அக்பர்!

Saturday, March 13, 2010

Indian atheist embraces Islam


RIYADH: A well-known Indian psychotherapist embraced Islam on Thursday.

Dr. Periyadarshan, who has changed his name to Abdullah, told Arab News Friday that Islam is the only religion in the world that follows a book directly revealed from God.


He said that as a student of comparative religions he believes books of other faiths have not been directly revealed to mankind from God. He said the Holy Qur’an is still in the same format and style as it was revealed to the Prophet Muhammed (pbuh) from Almighty Allah.


Dr. Abdullah is a visiting professor at the University of California in Los Angeles.


He also acted in the famous Tamil film “Karuthamma” about the killing of newborn baby girls in some remote villages in India. The production received national award from the Indian government.


“I was well known in India for my atheist theology and later I became to realize that religion is the only way out for human beings both in this world as well as in the hereafter,” he said.


Dr. Abdullah will be performing Umrah on Saturday on his first visit to the holy cities of Makkah and Madinah.


பெரியார்தாசன் வெள்ளிகிழமை அன்று சவுதியில் இசுலாத்தை தழுவினர் அப்துல்லாஹ் என்று பெயர் மாட்டாராம்.


டாக்டர். பெரியார்தாஸன் இஸ்லாத்தை தழுவினார்.இது சவுதியில் நேற்று நடந்திருகிறது. அவரின் பெயர் அப்துல்லாஹ் என்று மாற்றம் செய்யப்பட்டிருகிறது. மாஷா அல்லாஹ். மேலும் இன்று சனிக்கிழமை உம்ரா செய்ய இருப்பதாக சவுதி பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும் http://arabnews.com/saudiarabia/article29180.ece