இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, July 25, 2011

ஒரே வேனில் அழைத்து செல்லப்படுவதால் கொலை கைதிகளை கண்டு நடுங்கும் ஆ.ராசா, கல்மாடி; பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

புதுடெல்லி, ஜூலை. 18-
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலுக்காக கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி, வி.கே.வர்மா, லலித் பானட், ஜெயச் சந்திரன், சுர்ஜித்லால், ஏ.எஸ்.வி.பிரசாத் ஆகியோரும் திகார் ஜெயிலில் உள்ளனர்.
ஆ.ராசா, கல்மாடி ஆகியோர் விசாரணைக்காக வேனில் ஏற்றி செல்லப்படும் போது கொலை கைதிகளும் உடன் ஏற்றிச் செல்லப்படுகிறார்கள். இதற்கு ராசா, கல்மாடி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு செய்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
வழக்கு விசாரணைக்காக எங்களை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் போது கொலை, கொள்ளை வழக்கு கைதிகளையும் எங்களுடனேயே ஒரே வேனில் அழைத்து வருகிறார்கள். ஜெயிலர்களுக்கு அவர்கள் பயப்படுவதே இல்லை. அந்த கைதிகளை பார்த்தாலே பயமாக உள்ளது. அவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே எங்களை விசாரணைக்கு அழைத்து செல்லும் போது, தனி வேன்களில் அழைத்து செல்ல வேண்டும். இல்லையெனில் எங்கள் வழக்கு விசாரணையை வீடியோ கான்பரன்சிங்கில் நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது உத்தரவிட்ட நீதிபதி தல்வந்த்சிங், திகார் ஜெயில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.