இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, July 4, 2011

இலவச பஸ் பாஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை: 2011-12ம் கல்வியாண்டுக்கான இலவச பஸ் பாஸ் விநியோகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.


ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர், அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர், அரசு பாலிடெக்னிக் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் அரசு இலவச பஸ் பாஸ்களை விநியோகித்து வருகிறது.

அந்த அடிப்படையில் இந்த ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ் விநியோகத்தை இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து சில மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ்களை வழங்கினார்.

நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 27 லட்சத்திற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் அரசு செலவிடவுள்ள தொகை ரூ. 303.84 கோடியாகும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.