மனிதநேய மக்கள் கட்சிக்கு வாருங்கள்! ம.ம.க. தலைவர் அழைப்பு!
மனிதநேய மக்கள் கட்சிக்கு வாருங்கள், உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் பாடுபடத் தயாராக இருக்கிறோம்" என முஸ்லிம் அமைப்புகளுக்கு ம.ம.க. தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக இஸ்லாமிய உலமாக்களின் அமைப்பான இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் தமிழக சட்டசபை முஸ்லிம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா கடந்த 27.06.2011 அன்று சென்னையில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் முஹம்மது கான் பாகவி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தர்வேஸ் ரஷாதி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு ம.ம.க. எம்.எல்.ஏ.க்களான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், அ. அஸ்லம் பாஷா ஆகியோருக்கும், அதிமுக எம்.எல்.ஏ.க்களான முஹம்மது ஜான், அப்துல் ரஹீம் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ம.ம.க. எம்.எல்.ஏ.க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதிமுக எம்.எல்.ஏ. முஹம்மது ஜான், அமைச்சராக அறிவிக்கப்பட்டதால் அவரும், அப்துல் ரஹீமும் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சியில் ம.ம.க. தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. பேசியதாவது:
‘‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இக்கட்டான காலத்தில் 1995ல் துவக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் ரத்த தானம் செய்த இயக்கத்தினர் தமுமுகவினர் தான். சுனாமி பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட போது, நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டோம். பின், மனிதநேய மக்கள் கட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கி, அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடுகிறோம்.
இந்த தேர்தலில் ம.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி, கட்சியினரின் உழைப்புக்கும், பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஆதரவுக் குரல் கொடுப்பதற்கும் கிடைத்த அங்கீகாரம். எனவே, முஸ்லிம்கள் ம.ம.க.வில் இணைய வேண்டும். உங்கள் அனைவருக்காகவும் பாடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு ம.ம.க. தலைவர் பேசினார்.
Thursday, July 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.