இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, July 4, 2011

மக்களுக்கு சேவை செய்ய எனக்கு முதல்வர் வாய்ப்பளித்துள்ளார்: செந்தூர்பாண்டியன்

கடையநல்லூர்: தனக்கு அமைச்சர் பதவி வழங்கி தமிழக மக்களுக்கு சேவை செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா பணித்துள்ளதாக எம்.எல்.ஏ. செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை நேற்று 2வது முறையாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் சட்டத்துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா நீக்கப்பட்டார். புதிய அமைச்சராக கடையநல்லூர் எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த செந்தூர்பாண்டியன் இம்முறை சட்டசபை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நேற்று அமைச்சராக அறிவிக்கப்பட்டதன் மூலம் கடையநல்லூர் தொகுதிக்கு விஐபி அந்தஸ்து கிடைத்துள்ளது.

தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக இன்று (4-ம் தேதி) பதவியேற்க உள்ள செந்தூர்பாண்டியன் கூறுகையில்,

தமிழகத்தில் மக்கள் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவி்த்து வருகின்றனர். கடையநல்லூர் தொகுதி மக்களுக்கு தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவி மூலம் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.