இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லா அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனை கண்காணிப்பாளர் திருமதி. ஜமுனாராணி மற்றும் மருத்துவர்களை சந்தித்து மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான கட்டமைப்பு மற்றும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கேட்டுகொண்டதன் பேரில் விரைவில் சர்க்கரை நோய் மையம் விபத்து நேரத்தில் நோயாளிக்கு அளிக்கவேண்டிய அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய 'டிராமா கோ' மற்றும் மகப்பேறு பிரிவில் நோயாளிகளின் உறவினர்கள் இருக்க மேல்கூரை உள்ள அறை ஆகிய அனைத்து வசதிகளும் விரைவில் செய்து முடித்து தருவதாக வாக்களித்தார்.
பின்பு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று இராமநாதபுரம் பாதாள சாக்கடை சம்பந்தமாகவும் எதிர்வருகின்ற மழைக்காலத்தில் தேங்கி மக்களின் இயல்பு நிலையை பாதிக்கும் மழைநீரை வெளியேற்ற இராமநாதபுரத்தில் காட்டுபிள்ளையார் கொவில் தெரு, நாகநாதபுரம், சிதம்பரனார் ஊரணி ஆகிய மூன்று இடங்களில் நவீன பாதாள சாக்கடை பம்பிங் நிலையம் அமைப்பது பற்றியும் நகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியானர் கணேசன், நகராட்சி பொறியாளர் மகேந்திரன், சுகாதார துறை சந்திரன் ஆகியோர் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சலிமுல்லாகளான் . மாவட்ட செயலாளர் அன்வர்அலி. நகர் தலைவர் சுல்தான் மற்நும் கவுன்சிலர் ஆரிப் ராஜா, மருத்துவ அணி ரியாஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Thursday, July 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.