இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, July 4, 2011

செஞ்சி அருகே ஜெ., பெயரில் ஆக்கிரமித்த இடம் மீட்பு

செஞ்சி: செஞ்சி அருகே முதல்வர் ஜெயலலிதா பெயரில் திடீர் நகரை துவக்கி ஆக்கிரமித்திருந்த குடிசைகளை தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் இன்று அதிரடியாக அகற்றினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்களவாய் கிராம எல்லையில் சங்கராபரணி ஆற்றை ஒட்டி ஆற்று புறம்போக்கு இடம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் 50 சென்ட் அளவிற்கு புல்டோசர் வைத்து சமப்படுத்தி முதல்வர் ஜெ., படத்துடன் புரட்சி தலைவி அம்மா ஜெ., ஜெயலலிதா நகர் என பெயரிட்டு இரவோடு இரவாக குடிசைகளை போட்டனர். இது குறித்த செய்தி தினமலரில் வெளியானது. இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மணிமேகலை செஞ்சி தாசில்தார் பரந்தாமனுக்கு உத்தரவிட்டார்.


இதையடுத்து இன்று காலை 8.45 மணிக்கு தாசில்தார் பரந்தாமன் தலைமையில் மண்டல துணை தாசில்தார்கள் சேகர், பூமிநாதன், வருவாய் ஆய்வாளர்கள் கோட்டீஸ்வரன், செல்வக்குமார், மேல்களவாய் வி.ஏ.ஓ., சிவாநாதன் மற்றும் 10 க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு வந்தனர். செஞ்சி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு வந்திருந்தனர்.

இவர்கள் முதலில் குடிசைகளை சோதனை செய்து ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர் பொக்லைன் கொண்டு அனைத்து குடிசைகளையும் 15 நிமிடத்தில் அகற்றினர்.

அகற்றப்பட்ட கூரைகளை டிராக்டரில் எடுத்து சென்றனர். குடிசைகளுக்கு முன்பு முதல்வர் ஜெ., படத்துடன் வைத்திருந்த ஜெ.ஜெயலலிதா நகர் என்ற அறிவிப்பு பலகையையும் அகற்றி, அதில் முதல்வர் ஜெ., படம் இருந்த ரெக்சினை தனியாக பிரித்து எடுத்தனர்.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.