இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, June 7, 2011

மதுரையில் மத்திய மந்திரி மு.க.அழகிரி வீட்டுக்கு ஆயுதங்களுடன் வந்தவர் கைது; அரிவாள்-கத்தி பறிமுதல் Madurai செவ்வாய்க்கிழமை, ஜூன் 07, 4:21 PM IST மதிப்பீடு இல்லை இமெயில் பிரதி திரைப்படம் மதுரை, ஜூன் 7-

சென்னை, ஜூன்.7-


கவர்னர் உரை மீதான விவாதத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் பாண்டியராஜன் பேசியதாவது:-

கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கி விட்டது. தற்போது புதிய அரசு திட்ட அமலாக்க அமைச்சகத்தை கொண்டு வந்தது பாராட்டத்தக்கது. இதன்மூலம் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி தமிழகம் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேற முடியும்.

முதல்-அமைச்சரின் தொலைநோக்கு பார்வை திட்டமாக மாற வேண்டும். அதனை நிறைவேற்ற தே.மு.தி.க. முழு ஆதரவு அளிக்கும். வேளாண்மைக்கு புத்துயிரும், வளர்ச்சியும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். தென்தமிழக வளர்ச்சிக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது அதனை மனமாற பாராட்டுகிறேன்.

சில பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள். விதிகளை மீறும் பள்ளிகள் மீது பெற்றோர் வந்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அரசு அறிவித்து உள்ளது. அவ்வாறு இல்லாமல் அரசே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களிடம் பயம் ஏற்பட்டு அது கொந்தளிப்பாக மாறும் நிலை உருவாகலாம். கவர்னர் உரையை வரவேற்கிறேன்.


இவ்வாறு அவர் பேசினார்.

பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.), நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.) ஆகியோர் பேசும்போதும் கவர்னர் உரையை பாராட்டினர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.