மதுரையில் மத்திய மந்திரி மு.க.அழகிரி வீட்டுக்கு ஆயுதங்களுடன் வந்தவர் கைது; அரிவாள்-கத்தி பறிமுதல்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க. அழகிரியின் வீடு மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள சத்யசாய் நகரில் உள்ளது. நேற்று இரவு மு.க.அழகிரியின் வீட்டை வாலிபர் ஒருவர் காரில் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றி வந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். இதனை பார்த்து மு.க.அழகிரியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் உதயசூரியன், விஜயசேகரன் ஆகியோர் அந்த மர்ம காரை மடக்கி பிடித்து காரை ஓட்டி வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால் அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததுடன், மத்திய மந்திரி மு.க.அழகிரியை சந்தித்து அவரிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவரை உள்ளே விடவில்லை.
மேலும் அந்த வாலிபர் மற்றும் அவர் ஓட்டி வந்த காரை இன்று காலை தி.மு.க.வினர் மதுரை சுப்பிரமணியபுரம் போலீசில் ஒப்படைத்தனர். மர்ம வாலிபர் கொண்டு வந்த காரை போலீசார் சோதனை செய்ததில் அதில் அரிவாள், இரும்பு கம்பிகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் கே.புதூர் அருகே உள்ள சிறுதூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் விஜயன் என்பது தெரியவந்தது. அவர் மதுரையில் உள்ள ஒரு டிராவல்சில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் விஜயன் மீது ஊமச்சிக்குளம் போலீசில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து விஜயனை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அழகிரிக்கு சொந்தமான தயா திருமண மகாலில் சில மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கும் விஜயனுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ள மத்திய மந்திரி வீட்டை ஆயுதங்களுடன் விஜயன் சுற்றி வந்துள்ளது தி.மு.க. வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.