சென்னை:மத்திய அரசு எப்போதும் போல் விலைவாசி உயர்வை நியாயப்படுத்தக் கூடாது. டீசல் விலை உயர்வு விஷயத்தில், மேற்கு வங்க முதல்வர் வழியில், தமிழக அரசு செயல்பட வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:காஸ், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய, மத்தியதர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வால், ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தி.மு.க., ஆட்சியில், 2006ல், அரிசியின் விற்பனை விலையை, 3.50லிருந்து, 2 ரூபாயாகவும், 2008ல், ஒரு ரூபாயாகவும் குறைத்தோம். குறைந்த விலையில் பருப்பு வகைகள், மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. காய்கறிகளின் விலையைக் குறைக்க கூட்டுறவு கடைகளில் நியாயமான விலையில் விற்பனை செய்ய, ஏற்பாடு செய்தோம்.மத்திய அரசு டீசல், காஸ் விலையை உயர்த்திய போது, தி.மு.க., ஆட்சியில் இரண்டு முறை டீசல் மீது விற்பனை வரி குறைத்தும், காஸ் சிலிண்டருக்கு மானியம் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது கூட, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காஸ் சிலிண்டர் விலை உயர்வு, 50 ரூபாய் என்பதை, 34 ஆக குறைத்து, 16 ரூபாய் மானியம் அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். எனவே, தமிழக அரசு, மேற்கு வங்க அரசைப் பின்பற்றி, விலைவாசி உயர்விலிருந்து மக்களை மீட்க, மாநில அரசுக்கு கிடைக்கும் விற்பனை வரியை, முன்பு தி.மு.க, அரசு குறைத்துக் கொண்டது போல், இப்போதும் குறைத்துக் கொள்ள வேண்டும்.மத்திய அரசு எப்போதும் போல் விலைவாசி உயர்வை நியாயப்படுத்துவதோடு விட்டு விடாமல், ஏழை மக்களை பாதிக்கக் கூடிய இப்பிரச்னையை முழுமையாக தீர்க்க முன்வருவது தான் அதன் தலையாய கடமை.இவ்வாறு தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.