இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 12, 2011

தே.மு.தி.க.,விற்கு அங்கீகாரம்; முரசு நிரந்தர சின்னம்

சென்னை : தே.மு.தி.க., மாநில அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்த அவரது அறிக்கை: மே 19ம் தேதி தே.மு.தி.க., சார்பில், தலைமை தேர்தல் கமிஷனருக்கு, அங்கீகாரம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. அக்கடிதத்தில், தே.மு.தி.க., தமிழக சட்டசபைத் தேர்தலில், 41 இடங்களில் போட்டியிட்டு, 29 இடங்களில் வெற்றி பெற்றதும், 30 லட்சம் ஓட்டுகள் பெற்றதும் சுட்டிக் காட்டப்பட்டது. 1968ம் வருடத்திய தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் ஒப்படைப்பு ஆணையின்படி, மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு உரிய தகுதிகளை தே.மு.தி.க., பெற்றுள்ளது. இந்திய தேர்தல் கமிஷன், கடிதத்தை முறையாக பரிசீலித்து, கடந்த 10ம் தேதி, தே.மு.தி.க.,விற்கு அங்கீகாரம் வழங்கி, உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தே.மு.தி.க., தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அதற்கு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன், கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.