நாளை டில்லி செல்கிறார் ஜெயலலிதா: சோனியாவை சந்திக்க வாய்ப்பு?
அ.தி.மு.க., பேனர் கிழிப்பு பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர்
பெண் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை
கருணாநிதியின் முடிவால் அதிர்ச்சியான தொண்டர்கள்
கோவில் நில பிரச்னையால் மயானத்திற்கு சென்ற மக்கள்

சமச்சீர் கல்வி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்

தே.மு.தி.க.,விற்கு அங்கீகாரம்; முரசு நிரந்தர சின்னம்
தகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு: மத்திய அரசு முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி
உரத்த சிந்தனை: வேண்டும் இன்னொரு விடுதலை : என்.கே.வேலு
சென்னையில் தேசிய கைத்தறி கண்காட்சி துவக்கம்
பெருமாள்கோவிலில்ஆழ்வார்கள்வைபவம்
கல்விக்கு ஏங்கும் குழந்தை தொழிலாளர்களை கொஞ்சம் படிக்க விடுங்க'
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்
புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் உள்ள செகா ஆர்ட் ..
முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக, முதல்வர் ஜெயலலிதா நாளை டில்லி செல்கிறார். மாநில வளர்ச்சிக்கான நிதிகளை பெறுவதற்கும், மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதற்கும், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஜெயலலிதா நேரில் சந்தித்து பேசுகிறார். இவர்கள் சந்திப்பின் எதிரொலியாக, தமிழக அரசியலில் கூட்டணி மாற்றத்திற்கான அரங்கேற்றம் நிகழும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
கடந்த 16ம் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். டில்லியில் நடக்கும் தேநீர் விருந்தில், ஜெயலலிதா கலந்து கொள்ளும்படி, சோனியா அழைப்பு விடுத்தார். முதல்வர் பதவி ஏற்றதும் சில நாட்களுக்குள் பிரதமரை முதல்வர் மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஜெயலலிதா ஈடுப்பட்டார். அதன்பின், கவர்னர் உரை சட்டசபையில் துவங்கியது. அதை தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதமும் நடந்ததால், அவரால் டில்லி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.கடந்த 10ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததால், நாளை அரசு செயலர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் டில்லி செல்ல முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
பட்ஜெட் கூட்டம் இந்த மாதம் இறுதியில் துவங்கி, அடுத்த மாதமும் நடைபெறவுள்ளது. பட்ஜெட் தொடருக்கு முன் நிதிநிலையை உறுதி செய்வதற்கும், தேவையான நிதியை மத்திய அரசிடம் பெறவும், ஆண்டு திட்ட நிதியை ஒதுக்கீடு செய்யவும் பிரதமரை முதல்வர் சந்தித்து பேசுவார்.குடும்பத்திற்கு 20 கிலோ இலவச அரிசி திட்டம் அறிவித்திருப்பதால் மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக அரிசியை பெறுவது, அதேபோல் மின்வெட்டு சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் பெறுவதற்கும், பிரதமரிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில நதி நீர் இணைப்பு திட்டம் கவர்னர் உரையில் இடம் பெற்றிருப்பதால், நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக பிரதமரிடம் கூடுதல் நிதியை பெறுவதற்கும், முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என தெரியவருகிறது. அதேபோல், இலங்கை தமிழர்கள் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், சில கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் சந்திப்புக்கு பின், சோனியாவை மரியாதை நிமித்தமாக முதல்வர் சந்திக்கவும் வாய்ப்புள்ளது. இரு பெண் தலைவர்களும் அரசியல் ரீதியாக மனம் விட்டு பேசி, 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என்பதால், தற்போதைய இருவரின் சந்திப்பு அரசியல் முக்கியவத்துவம் வாய்ந்ததாக அமையும் என கருதப்படுகிறது. குறிப்பாக, அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவாக புதிய கவர்னரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
டில்லியில் சோனியா, முதல்வர் சந்திப்பு நடக்குமா, அப்படியே இருவரும் சந்தித்து பேசினால், தமிழக அரசியலில் ரீ-ஆக்ஷன் என்ன என்பது குறித்து, பெயர் சொல்ல விரும்பாத கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது:பிரதமரை சந்திக்கும் போது, கண்டிப்பாக சோனியாவையும் முதல்வர் சந்திக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். அதனால் தான் சட்டசபையில் இலங்கை தமிழர், கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசையோ, காங்கிரசையோ அ.தி.மு.க., குற்றம் சாட்டி பேசவில்லை. மத்திய அரசை வலியுறுத்தி தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தி.மு.க., தலைவர் பிறந்த நாளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து சொல்லவில்லை. ஆனால், முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதும், சோனியா வாழ்த்து தெரிவித்தார். "கூடா நட்பு கேடாய் முடியும்' என, தி.மு.க., தலைவர் கூறியது, காங்கிரசாரின் மனதை புண்படுத்தியுள்ளது. தி.மு.க., ஒரு மூழ்கும் கப்பல் என தெரிந்துக் கொண்டே, அதில் பயணம் செய்து காங்கிரசும் மூழ்கியுள்ளது. எனவே, தி.மு.க., கூட்டணியை விட்டு எப்போது வெளியேறுவோம் என, காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சோனியா, முதல்வர் சந்திப்புக்கு பின் அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உருவாகுவதற்கு ஒரு அச்சாரமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.