உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகளின், "பொருந்தா கூட்டணி' தொடரக் கூடாது என்றும், இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதால், "பலி கடா' ஆகப்போவது யார்? என்ற கேள்வி, தி.மு.க., கூட்டணியில் உருவாகியுள்ளது.
சட்டசபை தேர்தலில், ஜனநாயக முற்போக்கு கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஆட்சியின் சாதனைகள் மற்றும் இலவச அறிவிப்புகள், வட மாவட்டத்தில் பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் புதிய கூட்டணியை நம்பி, தி.மு.க., சட்டசபை தேர்தலை சந்தித்தது. ஆனால், தேர்தல் முடிவு தி.மு.க.,வின் கணக்கை தவிடுபொடியாக்கும் வகையில் தலைகீழாக அமைந்தது. பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கைகோர்த்துள்ளதால், 110 தொகுதிகளை கைப்பற்றுவோம் என, அக்கட்சிகளின் தலைவர்கள் ராமதாஸ், திருமாவளவன் பேசி வந்தனர். கொங்கு மண்டலத்தில் கொங்கு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்ததால், அங்கும் தி.மு.க., கூட்டணி 20 தொகுதிகளை கைப்பற்றும் என தி.மு.க., நம்பியது. அதுவும் கைகூடவில்லை.வட மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஐந்து தொகுதிகளில் மட்டுமே தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. ஏறக்குறைய 60 தொகுதிகளில் தி.மு.க., மோசமாக தோல்வி அடைந்துள்ளது. தி.மு.க.,வின் கோட்டை என கருதப்படும் வடமாவட்டங்களில் கோட்டை விடுவதற்கு காரணம், "பொருந்தா கூட்டணி' என தி.மு.க.,வினர் வெளிப்படையாக விமர்சனம் செய்யத் துவங்கியுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெற்றிருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறவில்லை. தி.மு.க., ஆட்சி அமைந்த சில மாதங்களில் ஆளுங்கட்சிக்கு மதிப்பீடு மார்க்குளை பா.ம.க., குறிக்க ஆரம்பித்தது. சிறப்பு பொருளாதார மண்டலம், சென்னை துணை நகரம், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தியது. கடந்த 2009ம்ஆண்டு லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறி, அ.தி.மு.க., அணியில் பா.ம.க., இடம் பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க., அணியில் சேர்ந்தது. தேர்தலுக்கு தேர்தல் கூடு விட்டு கூடு பாயும் பா.ம.க.,வுக்கு பாடம் புகட்டும் வகையில், அக்கட்சி போட்டியிட்ட ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம், வட மாவட்டங்களில் தி.மு.க., கூட்டணி கணிசமாக வெற்றி பெற்றது.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் திருமாவளவனும் வெற்றி பெற்றார். பென்னாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிட்டு இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியது. இதையடுத்து, பா.ம.க.,வின் செல்வாக்கு கூடியிருக்கிறது என தவறாக கணித்த தி.மு.க., தலைமை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு 30 தொகுதிகளை வாரிக் கொடுத்தது. விடுதலைச் சிறுத்தைகளுக்கும் 10 தொகுதிகளை அள்ளிக் கொடுத்தது.வட மாவட்டங்களில் வன்னியர்களும், தலித் சமுதாயத்தினரும் எதிரும், புதிரும் அரசியலை நடத்தி வருகின்றனர். திடீரென இந்த தேர்தலில் இரு சமுதாயத்தின் கட்சித் தலைவர்களும் இணைந்ததை மற்ற ஜாதியினர் மட்டுமல்ல, வன்னியர், தலித் சமுதாயத்தினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பா.ம.க., - விடுதலைச் சிறுத்தையும் ஒன்றாக இருந்ததால் தி.மு.க.,வுக்கு வழக்கமாக விழ வேண்டிய அக்கட்சி ஓட்டுகளும் விழவில்லை.
மற்ற சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தி.மு.க., கூட்டணிக்கு எதிராக ஓட்டு அளித்தனர். அதேபோல் கள் வியாபாரிகள், நெசவாளர்கள், விவசாயிகள் பிரச்னைகளுக்கு செவி சாய்க்காமல் கொங்கு முன்னேற்றக் கழகத்தின் கடைசி நேர சந்தர்ப்பவாத கூட்டணியை மட்டும் நம்பியதால், அங்கும் படுதோல்வியைத் தான் தழுவ முடிந்தது.
எந்தக் கூட்டணியும் அமைக்காத தென் மாவட்டங்களில், வட மாவட்டங்களை விட மோசமாக இல்லாமல் ஓரளவு தி.மு.க., வுக்கு கை கொடுத்துள்ளது. அதாவது, முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த தங்கம்தென்னரசு, ஐ.பெரியசாமி, சுப.தங்கவேலன் மற்றும் மைதீன்கான், பெரியகருப்பன் போன்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் வலுவாக இல்லாத தென் மாவட்டங்களில் தி.மு.க., அணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:வரும் உள்ளாட்சித் தேர்தலில், "பொருந்தா கூட்டணி' தொடர்ந்தால், மூழ்கும் கப்பலில் பயணம் செய்வதற்கு சமம் என பல மாவட்டச் செயலர்கள் கருதுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க.,- விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியை கழட்டி விட்டே ஆக வேண்டும் என்ற நிலை தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. தொண்டர்களின் உணர்வுக்கு தலைமை மதிப்பு அளித்து முடிவு எடுக்குமா? அல்லது கூட்டணி தர்மத்தை மதித்து உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடருமா? என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.