புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில், கேமரா, மைக் போன்ற கருவிகளை பொருத்தி, உளவு பார்க்க முயற்சி நடந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி உளவு பிரிவினர் விசாரணை நடத்தியதாகவும், உளவு பார்க்கும் முயற்சி எதுவும் நடக்கவில்லை என்றும், பிரணாப் முகர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சராக இருப்பவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். அமைச்சரவையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அடுத்த இடத்தில் உள்ளார். இந்நிலையில், பத்திரிகை ஒன்றில், சமீபத்தில் பிரணாப் முகர்ஜி பற்றிய ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில், "கடந்தாண்டு செப்டம்பர் 7ல், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பிரணாப் முகர்ஜி ஒரு கடிதம் எழுதியிருந்ததார். அதில், டில்லி நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சக அலுவலகத்தில், 16 இடங்களில், பசை தடவப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அந்த இடங்களில், கேமரா, மைக் போன்ற கருவிகளை பொருத்தி, ரகசியமாக கண்காணிக்க முயற்சி நடந்ததா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என, பிரதமரை, பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்' என, அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. தன் அறை, தன் ஆலோசகரின் அறை, தன் தனிச் செயலரின் அறை மற்றும் இரண்டு கூட்ட அரங்குகள் ஆகிய இடங்களில், பசை தடவப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும், பிரணாப் முகர்ஜி, அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக, மத்திய நேரடி வரி வாரியம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், சம்பந்தபட்ட இடங்களில், மிகச் சிறிய கருவிகள் பொருத்தப்பட்டு, பின்னர் அகற்றப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம், மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து, மத்திய உளவு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதில், பாதுகாப்பு அத்துமீறல் போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. கண்காணிப்பு முயற்சி எதுவும் நடக்கவில்லை என, அவர்களின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார். பா.ஜ., கவலை: இந்த சம்பவம் குறித்து, பா.ஜ., துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், "நிதியமைச்சரின் அலுவலகத்தில், பாதுகாப்பு அத்துமீறல் நடந்துள்ளதாக வெளியான செய்தி கவலையளிக்கிறது. இது, மிகவும் முக்கியம் வாய்ந்த பிரச்னை. முக்கியமான நிதி மோசடிகள் தொடர்பான விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நிதியமைச்சரின் அலுவலகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடந்துள்ளதாக வெளியான தகவல் கவலை அளிப்பதாக உள்ளது' என்றார்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.