இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 12, 2011

பிளக்ஸ் போர்டு'களை பார்த்தால் அலறும் அமைச்சர்...!

இலங்கை விவகாரத்துல இனி அடக்கி வாசிக்க ஆரம்பிச்சிடுவா ஓய்...!'' என்ற தகவலுடன் பேச ஆரம்பித்தார் ப்பண்ணா.


"புது அரசு, ஆரம்பத்திலேயே இலங்கை விவகாரத்தை கையில எடுத்து மத்திய அரசை உலுக்கி எடுத்துட்டாங்களே... நீங்க மாத்தி சொல்றீங்களே...'' என்றார் அந்தோணிசாமி.

"இலங்கை சம்பந்தமா தமிழக சட்டசபையில நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பார்த்ததும் மத்திய அரசு, "அப்செட்' ஆனது வாஸ்தவம் தான்... அதனால தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை அனுப்பி வைச்சா... அவர் சென்னையில முதல்வரை சந்திச்சுப் பேசுனப்ப, மத்திய அரசுக்கு இருக்கும் நெருக்கடிகளை விளக்கிச் சொல்லிருக்கார் ஓய்...

"தமிழக சட்டசபை தீர்மானத்தின் பாதையில மத்திய அரசு போனா, இலங்கை அரசு சீனா பக்கம் சாய ஆரம்பிச்சிடும்... இலங்கைக்கு உதவ சீனாவும் காத்துண்டு இருக்கு... இது, நம்ம நாட்டுக்கே நெருக்கடியா முடியும்'னு விளக்கிருக்கார்... இதைக் கேட்டதும், முதல்வர், "கன்வின்ஸ்' ஆயிட்டாங்க ஓய்...'' என்றார் குப்பண்ணா.

"அமைச்சர் ரொம்பவே பயப்படறார் பா...'' என, அடுத்த விவகாரத்துக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.

"யாரைச் சொல்றீர் ஓய்...?'' என, விசாரித்தார் குப்பண்ணா.

"மதுரையைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜுவை வாழ்த்தி, கட்சி சார்பில் யாராவது, "பிளக்ஸ் போர்டு' வச்சா, அமைச்சர் டென்ஷன் ஆயிடறார்... அதுல, முதல்வர் ஜெயலலிதா படம் மட்டும் இருந்தா போதும்னு கட்சிக்காரங்ககிட்ட கெஞ்சறாராம்... ஓ.பன்னீர்செல் வத்தையும், இவரையும் அமைச்சர்களாக நியமிச்சதுக்கு, முதல்வருக்கு நன்றி தெரிவிச்சு கட்சிக்காரங்க மதுரை கோரிப்பாளையத்துல, "பிளக்ஸ் போர்டு' வச்சாங்க...

"இதைக் கேள்விப்பட்ட அமைச்சர், உடனே போர்டுல இருந்த தன் படத்தை மறைக்கும்படி கட்சியினர்ட்ட உத்தரவு போட்டுட்டாரு... ஒருவழியா, அவர் படத்தை மறைச்சப்பறம் தான் நிம்மதியானாரு பா... என்றார் அன்வர்பாய்.

"கூட்டணி கட்சிக்காரங்களும் கோதாவுல இறங்கிட்டாங்க வே... என, அடுத்த விவகாரத்துக்குள் நுழைந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

"ஆளும் கூட்டணி கட்சிகளைப் பத்தி சொல்றீங்களாங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

"ஆமாம் வே... தமிழகத்துல எப்ப ஆட்சி மாறினாலும், அரசு வக்கீல்கள் நியமனத்துல தங்கள் கட்சிக்காரங்களுக்கு வாய்ப்பு தருவாங்க... இம்முறையும் அரசு வக்கீல்களா ஆளுங்கட்சியினர் நிறைய பேரை நியமிச்சிருக்காவ...

"அதுமாதிரி, "எங்களுக்கும் வாய்ப்பு தரணும்னு, அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கற கட்சிகளும் கூட்டணி தலைமைகிட்ட கோரிக்கை வச்சிருக்காவ... தே.மு.தி.க., தரப்பு மட்டும் இதை வலியுறுத்தலை... மத்த கட்சியினர் கேட்டிருக்காவ...'' என்றார் அண்ணாச்சி.

"கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து பண்ணி சட்டசபையில அறிவிச்சுட்டாங்களே... அதனால, இவ்வளவு நாளா அரசு பணத்துல குளிர் காய்ஞ்சிட்டிருந்தவங்க என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கறாங்க... இந்த மருத்துவமனைகள் எல்லாம், கிடைச்ச தொகையில, கடந்த அரசுக்கு கமிஷன் கொடுத்தாங்க... கமிஷன் கொடுக்காத தனியார் மருத்துவமனைகளுக்கு காப்பீட்டுத் திட்ட அனுமதி தரலை... அவங்க எல்லாம் இப்ப, "தர்மம் வென்றது'ன்னு சொல்லி கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க...'' என, கடைசி தகவலை சொல்லிவிட்டு எழுந்தார் அந்தோணிசாமி; பெஞ்ச் அமைதியானது.

சட்டசபையில் அலுவலகம்... காங்கிரஸ், பா.ம.க.,வுக்கு, "பெப்பே!' ""ஒரு கட்சிக்கு ஒதுக்கியிருந்த அறையை, இப்ப மூணு கட்சிகளுக்கு பிரிச்சு கொடுத்துட்டாங்க...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

"சட்டசபை விவகாரமா பா...'' என்றார் அன்வர்பாய்.

"ஆமாங்க... போன ஆட்சியில, கோட்டையில சட்டசபை செயல்பட்டப்ப, எதிர்க்கட்சித் தலைவரா இருந்த ஜெயலலிதாவுக்கு, சட்டசபை நான்காவது நுழைவாயிலின் இடது பக்கத்துல தனி அலுவலகமும், காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் சுதர்சனத்துக்கு வலது பக்கமும் அலுவலகம் ஒதுக்கிருந்தாங்க... காங்கிரஸ் அலுவலகத்துக்கு பின்புறம், பா.ம.க.,வுக்கு ஒதுக்கினாங்க...

"புது சட்டசபை வளாகம் கட்டினப்ப, அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தனித்தனியா பெரிய அறைகளை ஒதுக்கினாங்க... இப்ப, கோட்டையிலேயே திரும்பவும் செயல்படுறதால, போன ஆட்சியில எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கின அறையை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு ஒதுக்கிட்டாங்க...

"காங்கிரசுக்கு ஒதுக்கியிருந்த அறையை, மூணா பிரிச்சு, வேலை நடந்துட்டு இருக்கு... அதுல தான், தி.மு.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்ன்னு மூணு கட்சிகளுக்கும் அறை ஒதுக்கப் போறாங்க... பா.ம.க.,வுக்கு ஒதுக்கியிருந்த அறையை, அரசு கொறடாவுக்கு ஒதுக்கிட்டாங்க... மூணு கட்சிகளுக்கு ஒரே அறையை பிரிச்சு கொடுக்கறதால, 43 எம்.எல்.ஏ.,க்கள் அதை பயன்படுத்தணும்...'' என, மூச்சு விடாமல் பேசினார் அந்தோணிசாமி.

"ஒண்ணு, ரெண்டு இடங்கள்ல போட்டியிட்டு ஜெயிச்ச எம்.எல்.ஏ.,க்களுக்கு, அறை உண்டா பா...'' என்று கேட்டார் அன்வர்பாய்.

"காங்கிரஸ், பா.ம.க., மற்றும் ஒற்றை இலக்கத்துல எம்.எல்.ஏ.,க்களை வைச்சிருக்கற கட்சிகளுக்கு அறை கிடையாதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

"கடந்த ஆட்சியில், "பவர்புல்'லா இருந்த உதவிக் கமிஷனர், இப்பவும் ஏக குஷியில இருக்காரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.

"பார்க்க வேண்டியவாளை பார்த்து, நல்ல இடத்துக்கு, "போஸ்டிங்' வாங்கிட்டாளா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

"சரியா சொல்லுதீரு வே... இந்த அதிகாரி, முன்னாள் முதல்வர் குடும்பத்தின் ஆசிர்வாதத்துடன், அதிகார தோரணையுடன் வலம் வந்துட்டு இருந்தாரு... ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அந்த அதிகாரியை, "டம்மி'யான இடத்துக்கு மாத்துவாங்கன்னு, போலீஸ் வட்டாரத்துல பேசிகிட்டு இருந்தாவ... ஆனா, பார்க்க வேண்டியவங்களை பார்த்து, சென்னையிலேயே சத்தமில்லாம, "போஸ்டிங்' வாங்கிட்டாரு வே...'' என்றார் அண்ணாச்சி.

"அதிகாரிங்க எல்லாம் கையை பிசைஞ்சுகிட்டு இருக்காங்க பா...'' என அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

"என்ன பிரச்னைங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி.

"சமச்சீர் கல்வித் திட்டம், பெரிய இடியாப்ப சிக்கலா மாறியிருக்கு பா... ஐகோர்ட் தீர்ப்பால, எந்த முடிவு எடுக்கறதுன்னு தெரியாம, அரசு முழிச்சிகிட்டு இருக்கு... இந்த மாதிரியான பிரச்னைகள் வரும்னு, முன்கூட்டியே அதிகாரிங்க, அமைச்சர்கிட்ட சொல்லிருக்காங்க...

"அதுக்கு, "முதல்வர் ஒரு முடிவு எடுத்துட்டாங்க... அதுக்கப்பறம் இனிமே நாம எதுவும் சொல்ல முடியாது... சொல்றதை செய்யுங்க'ன்னு, சொல்லிருக்காரு பா... இப்ப, என்ன செய்யறதுன்னு தெரியாம அதிகாரிகள் முழிக்கறாங்க...'' எனக் எனக் கூறிவிட்டு அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் புறப்பட்டனர்.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.