உள்ளாட்சி கூட்டங்களில், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியினரிடையே, ஒரு புறம் மோதல் அதிகரித்து வருகிறது. மறுபுறம், உள்ளாட்சி பிரதிநிதிகள், கடைசிக்கட்ட வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் அதிரடியாக கலைக்கப்படும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட, 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து, 618 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாவும், ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்டவை, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.சென்னை கோயம்பேட்டில் இயங்கும் தமிழக தேர்தல் கமிஷன் மூலம், இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடக்கின்றன. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான் மேயர்கள், தலைவர்கள், கவுன்சிலர்களாக இருக்கின்றனர்.
இந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், வியாபாரிகள், தனியார் நிறுவனங்களின் முதலாளிகள் என, பலதரப்பட்டவர்களிடம் வசூல்வேட்டை நடத்தி, அவர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் இந்த அட்டகாசம் தான், சட்டசபைத் தேர்தலில் சென்னை மாநகராட்சி உட்பட, பல இடங்களில் தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடைய முக்கிய காரணமாக அமைந்ததாக கருத்து நிலவுகிறது.ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசம் குறையும் என கருதப்பட்டது; ஆனால், அது இன்னும் குறையவில்லை. சென்னை உட்பட, அனைத்து மாநகராட்சிகளிலும் கவுன்சிலர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
புதிதாக வீடு மற்றும் தனியார் கட்டடம் கட்டுபவர்கள், வர்த்தகம் செய்பவர்கள், சிறிய நிறுவனங்கள் நடத்துபவர்கள், கான்ட்ராக்டர்களிடம், கடைசிக்கட்ட வசூலில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இறங்கியுள்ளனர். கிராமப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளும், "கிடைத்தவரை லாபம்' என்ற ரீதியில், இதே பார்முலாவை பின்பற்றி, பல வகைகளிலும் வசூல் செய்கின்றனர்.மற்றொருபுறம், அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினரும், ஆதரவு தெரிவித்து ஆளுங்கூட்டணி கட்சியினரும் உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றுவதில், பல இடங்களில் கைகலப்பு வரை மோதல் நடந்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பதவிகளை வகிப்பதால், தமிழக முதல்வர் படத்தை வைப்பதற்கு கூட, அனுமதி மறுத்து மோதல் நடந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் மோதல்கள், நாற்காலி வீச்சு போன்ற சம்பவங்களின்போது, போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தி வருகின்றனர்.அடுத்து நடக்கவுள்ள கூட்டங்களில் இதுபோன்ற மோதல்கள், வன்முறையாக வெடிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இதுகுறித்த தகவல்கள் அரசு மற்றும் மாநில தேர்தல் கமிஷன் கவனத்திற்கு உளவுத்துறை போலீசார் மூலம் சென்றுள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் உட்பட, பல தரப்பட்டவர்கள் நலன்கருதி, உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் விரைவில் கலைக்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போதுள்ள உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் அக்டோபருடன் முடிகிறது. உள்ளாட்சி அமைப்புகள் அதிரடியாக கலைக்கப்பட்டாலும், தேர்தல் செப்டம்பர் இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத துவக்கத்திலோ தான் நடக்கும் என தெரிகிறது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழுக்கு மாறும் கமிஷன் "வெப்சைட்' : தமிழக தேர்தல் கமிஷன் மூலம், 1996, 2001 மற்றும் 2006ம் ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடைத்தேர்தல்களும் நடந்துள்ளது. தேர்தல் கமிஷன், "வெப்சைட்' ஆங்கிலத்திலேயே உள்ளது. இந்த வெப்சைட்டில், தேர்தல் கமிஷன் பற்றிய தகவல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள், வேட்பாளர்கள் தகுதிகள், நேரடி தேர்தல் நடக்கும் உள்ளாட்சி பதவிகள், மறைமுக தேர்தல் நடக்கும் உள்ளாட்சிப் பதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.அவை, ஆங்கிலத்திலேயே உள்ளதால், அவற்றை, பல உள்ளாட்சி நிர்வாகிகளாலும், புதிதாக போட்டியிட தயாராகி வருபவர்களாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கு செம்மொழி மாநாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழக தேர்தல் கமிஷன் வெப்சைட் மட்டும் கண்டுகொள்ளப்படாமல் அப்படியே இருந்தது.மூன்று மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் முயற்சியால், தேர்தல் கமிஷன் வெப்சைட்டும் விரைவில் புதுப்பொலிவு பெறவுள்ளது. அனைவரும் அறியும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெப்சைட்டை மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.