இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 19, 2011

தலைமைச் செயலகத்தை மாற்றுவது வீண் வேலை: கருணாநிதி

சென்னை: "மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும்போது, தலைமைச் செயலகத்தை மாற்றுவதில், அரசு இயந்திரத்தின் முழுக் கவனத்தையும் செலவழிப்பது வீண் வேலை' என, கருணாநிதி கூறியுள்ளார்.


தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:அ.தி.மு.க., ஆட்சியின்போது, "ராணிமேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார். அப்போது, "செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல் ஏற்பட்டுள்ளது' என்றார்.அதை மனதில் கொண்டு, தி.மு.க., ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. சில பத்திரிகைகளில், "1,200 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்டது' என எழுதுகின்றனர். தற்போது கட்டி முடிக்கப்பட்ட கட்டடம், 479 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தற்போது கட்டப்படும், "பி பிளாக்' கட்டடத்தின் மதிப்பு, 279 கோடியே, 56 லட்ச ரூபாய். இதில், 72 கோடியே, 30 லட்ச ரூபாய் செலவாகி உள்ளது. எனவே, 1,200 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு.

விரிசல் உள்ள கட்டடத்திற்கு, தலைமைச் செயலகத்தை மாற்றி, அங்கு அசம்பாவிதம் நடந்தால், அற்கான முழு பொறுப்பையும் புதிய ஆட்சியாளர்கள் தான் ஏற்க வேண்டும். புதிய அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள், மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும் போது, தலைமைச் செயலகத்தை மாற்றுவதில், அரசு இயந்திரத்தின் முழுக் கவனத்தையும் செலவழிப்பது வீண் வேலை.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.