இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, June 14, 2011

புதிய கல்வி கட்டணம் போதாது: 6355 பள்ளி நிர்வாகிகள் மேல் முறையீடு செய்ய முடிவு

சென்னை, ஜூன்.14-


நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழுவிடம் மேல் முறையீடு செய்த 6355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணம் செய்து நேற்று அறிவிக்கப்பட்டது.

பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர் சம்பளம், நிர்வாக மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவற்றை ஆய்வு செய்து புதிய கல்வி கட்டணத்தை குழு நிர்ணயம் செய்தது. புதிய கல்வி கட்டணம் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்த தகவல் இன்னும் தனியார் பள்ளிகளுக்கு போய் சேரவில்லை. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இன்று தனியார் பள்ளிகளுக்கு வழங்குகிறார்கள். ஆனாலும் தாங்கள் கேட்ட அளவிற்கு கல்வி கட்டணம் உயர்த்தி தரப்படவில்லை. மிக குறைந்த விகிதத்தில் உயர்த்தப்பட்டு இருப்பதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

இந்த கட்டணத்தை கொண்டு பள்ளியை நடத்த இயலாது என்பதால் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தனியார் பள்ளிகள் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-

நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு 6355 தனியார் பள்ளிகளுக்கும் முறையாக கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை. நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு ரூ.10,000, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.15,000, உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.20 ஆயிரம், மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரம் என்று கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஆனால் கமிட்டி ரூ.150, ரூ.250 என்று அளவில் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. புதிய கல்வி கட்டணத்தை கொண்டு பள்ளிகளை நடத்த இயலாது. அதனால் மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருக்கிறோம். கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணம் குறைவாக உள்ளதாக கருதும் பள்ளிகள் மேல்முறையீடு செய்யலாம் என ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இந்த மாத இறுதிக்குள் கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி மேல்முறையீடு செய்கிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் 17-ந்தேதி முதல்-அமைச்சரின் தனிப் பிரிவில் கோரிக்கை மனு கொடுக்க இருக்கிறோம்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் ( முதலமைச்சர் ) மக்களின் நலன் கருதி அணைத்து தனியார் பள்ளி களையும் அரசுடமை ஆக்கி நன்மை தருவாரா? கேபிள் டிவி அரசுடமை ஆஹும் பொது !! தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடமை ஆக்குவதில் சட்ட சிக்கல் வராது என்து நம்புகிறான்.

 அந்த அம்மா ஏற்கனவே மக்கள் பக்கம் இல்லை. நாங்க கல்வி கட்டநிதில் தலையிட முடியாது. ஆனால் பள்ளிகள் கட்டணம் குறைவாக இருந்தால் நாங்கள் தலையிடுவோம் என்றார். ஒரு முதல் அமைச்சர் பேசும் பேச்சை பாருங்க. மக்களுக்கு சாதகாமாக பேசாமல் கொள்ளை அடிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு சாதகமாக இருக்கிறார்.

தனியார் பள்ளி முதலைகள் எப்படியும் (ரசீது இல்லாமல்) வசூல் பண்ணிவிடுவார்கள். அதற்குள் இப்படி ஒரு ஸ்டண்டு....


தனியார் பள்ளிகளின் கட்டணத்தை கட்டுபடுத்த போராடும் நாம், நம் வரி பணத்தில் செயல் படும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் அணைத்து தரப்பு மக்களுக்கும் நிச்சயமாக பயன் பெறுவர்.
 
அரசு பள்ளிகளின் தரமனதாக இருந்தால் யார்தான் வேறு இடம் செல்வார்கள். அரசு பள்ளிகலை சரியாக நடத்த என்ன குறை.
 
  


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.