இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, June 14, 2011

சமச்சீர் கல்வி் வழக்கு: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி, ஜூன்.14-


சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திருத்த மசோதாவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.

இதில் 1-ம் மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இக்குழு தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும். பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் மற்றும் பள்ளிக் கல்வி வாரிய அதிகாரிகள் 2 பேர், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2 பேரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் 2 வாரத்திற்குள் இந்நிபுணர் குழு அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையின் மீது 1 வாரத்திற்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில் உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கும் வரை 2,3,4,5,7,8,9,10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தவேண்டாம் எனவும், உயர்நீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகு மற்ற வகுப்புகளுக்கு பாடம் நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.