பெரம்பலூர்,ஜூன்.23-
தமிழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டிபடி ஒவ்வொரு பள்ளிக்கும் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதனையும் மீறி பெரம்பலூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் கூடு தல் கட்டணம் வசூலிக்கப்படு வதாக மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொது மக்கள் புகார் அளித்தனர்.
இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வழங்கிட முதன்மை கல்வி அதிகாரி ராஜனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு அரசு மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் ஜெயக்குமார் நேற்று பெரம்பலூர் பகுதியில் உள்ள 3 மெட்ரிக்பள்ளிகளில் ஆய்வு நடத்தினார். அங்கு நிர்ண யிக்கப்பட்ட கட்டணத்தையும், பள்ளி சார்பில் பெறப்படும் கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்த்தார். கூடுதலாக பெறப்பட்ட தொகைக்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகி களிடம் கேட்டறிந்தார்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட பள்ளி களிடமிருந்து கூடுதலாக பெற்றப்பட்ட தொகை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப் படும். கூடுதலாக வசூலித்த காரணத்திற்காக சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது துறை சார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரித்தார்.
அப்போது பெரம்பலூர் மாவட்ட முதன்கை கல்வி அலுவலர் ராஜன், மாவட்ட கல்வி அலுவலர் சீத்தாராமன்,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.