இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 27, 2011

சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கை தாக்கல் கெடு முடிகிறது

சென்னை ஜூன் 27 -


சமச்சீர் கல்வி 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய கடந்த 14ம் தேதி தலைமைச்செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் ,இரண்டு வாரத்துக்குள் சமச்சீர் கல்வி குறித்து ஆராய்ந்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது

இதன்படி தமிழக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.

சுப்ரீம் கோர்ட் விதித்த கெடு நாளையுடன் (28ம் தேதி) முடிவடைகிறது. குழு அளிக்கும் அறிக்கை மீது ஒரு வாரம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி ஐகோர்ட் இறுதி முடிவை அறிவிக்கும் .

இந்நிலையில் தலைமைச் செயலாளர் தலைமையிலான நிபுணர் குழு முதல்வர் ஜெயலலிதாவை வரும் புதனன்று சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.