இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 27, 2011

சமச்சீர் கல்வியை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும்: தி.மு.க. வலியுறுத்தல்

வத்தலக்குண்டு, ஜூன். 25-


வத்தலக்குண்டு நகர தி.மு.க. சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் 88-வது பிறந்த நாள் விழா, கழக உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மான விளக்க வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கம் பொதுக் கூட்டம் என முப்பெரும் விழா வத்தலக்குண்டு காளி யம்மன் கோவில் அருகே நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சின்னத் துரை வரவேற்பு நிகழ்த்தினார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் குமார் பேசியதாவது:-

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தி.மு.க. தோல்வியை கண்டு துவண்டு விடாது. மறுபடியும் மலரும். ஏழை- எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் தி.மு.க. ஆட்சியின்போது சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில் அது மறுக்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி இத்திட்டம் அமல்படுத்த வேண்டுமென்று பேசி தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் வி.பி.ராஜன் பேசும்போது, தமிழகத்தில் சமச்சீர் கல்வியை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும். ஆய்வுக் குழுவில் கல்வியாளர்களாக தனியார் பள்ளிகளின் சார்பில் நியமித்தவர்களை வாபஸ் பெற வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர்கள் பரமேஸ்வரி முருகன், பிச்சைமணி, பொருளாளர் கனிக்குமார், சேவுகம்பட்டி நகர செயலாளர் தங்க ராஜன், பேரூராட்சி துணை தலைவர் ரவி என்ற இருளப்பன், விருவீடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி செல்வராஜ், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்வி பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் கர்ணன், ரெக்ஸ், மகேந்திரன்.

ஒன்றிய பிரதிநிதி டாக்டர் அப்துல் ஹமீது, ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஜெயராமன், வார்டு கவுன் சிலர்கள் அமுதவேல், முரு கேசன், கோழிப்பாண்டி, ரவி, ரவிச்சந்திரன், நகர துணை செயலாளர் சோடா குமரவேல், பொரு ளாளர் அக்கீம், தொண் டரணி வடிவேல், 16-வது வார்டு துணை செயலாளர் ஷாஜகான், இளைஞரணி அசோக்குமார் உள்பட தி.மு.க.வினர் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் பேரூர் அவைத்தலைவர் தவமணி நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.