வைகோவுக்கு பாஜக அழைப்பு
சென்னை, மார்ச் 21: பாஜக கூட்டணிக்கு வைகோ வந்தால் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து அவர் தினமணி நிருபரிடம் திங்கள்கிழமை கூறியது: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முடிவு செய்துள்ளார். இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பது சரியானது அல்ல. அவர் எங்களோடு கூட்டணியில் இருந்தவர். யாருடன் கூட்டணி என்றாலும் உறுதியோடு அனைத்து பகுதிகளிலும் பிரசாரம் செய்பவர். பழுத்த, நாகரிமான அரசியல்வாதியான அவர் விரும்பினால் பாஜகவோடு இணைந்து தேர்தலை சந்திக்கலாம். இது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.