அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்து இழந்த தொகுதிகள்
சென்னை, மார்ச். 17-
அ.தி.மு.க. போட்டியிடும் 160 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட் பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். இதில் ம.தி.மு.க.வுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் கேட்ட தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிடுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த பல தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டி என்பது உறுதியாகி விட்டது.
கடந்த தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பெரம்பூர், திண்டுக்கல், திருப்பூர், அரூர், நாகப்பட்டினம், மதுரை தெற்கு ஆகிய 6 தொகுதிகளில் வெற்றி பெற் றது. இந்த தொகுதிகளில் இப்போது அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டி யிட்டு வெற்றி பெற்ற 6 தொகுதிகளை இழந்து விட்டதால், வென்ற தொகுதிகளில் 3-ல் மட்டுமே மீண்டும் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கடந்த தேர்தலில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், சிவகங்கை, ஆலங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகிளல் வெற்றிபெற்றது.
இப்போது, இந்த 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட் டுள்ளனர். எனவே இந்த கட்சி புதிய தொகுதிகளை தேட வேண்டியது இருக்கிறது. தே.மு.தி.க. 41 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது தே.மு.தி.க. போட்டியிட விரும்பி எழுதிக்கொடுத்த தொகுதிகளில் 17-ல் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்டது. கார்த்திக் தலைமையிலான நாடாளு மக்கள் கட்சியும், கேட்ட தொகுதி கிடைக்காததால் விலகி விட்டது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாசு தேவநல்லூர், ஓட்டப்பிடாரம், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லி புத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் இரண்டை ஒதுக்கும்படி அ.தி.மு.க. வுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஜெய லலிதா நிறுத்தியுள்ளார். விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் இழந்ததற்கு காரணம் புரியாமல் அதிர்ச்சியில் உள்ளன.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.