அ.தி.மு.க. வேட்பாளர்களில் 13 பேர் பெண்கள்; 26 தனித் தொகுதிகளில் போட்டி
சென்னை, மார்ச். 17-
தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் விபரத்தை நேற்று வெளியிட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை ஆய்வு செய்து பார்த்த போது பல ருசிகர தகவல்கள் தெரியவந்தது.
160 வேட்பாளர்களில் ஜெயலலிதா உள்பட 13 பேர் பெண்கள். அவர்கள் விவரம் வருமாறு:-
1. ஸ்ரீரங்கம்-ஜெயலலிதா, 2. ஆயிரம் விளக்கு-பா.வளர்மதி, 3. அண்ணா நகர்- கோகுல இந்திரா, 4. மயிலாப்பூர்-ஆர்.ஜானகி, 5. மது ராந்தகம்-கனிதா சம்பத். 6. ஊத்தக்கரை-மனோரஞ்சிதம் நாகராஜ், 7. செஞ்சி- தமிழ்மொழி ராஜதத்தன், 8. கள்ளக்குறிச்சி-பா.அழகுவேல் பாபு, 9. சேலம் வடக்கு-விஜயலட்சுமி பழனிச்சாமி, 10. திருப்பூர் தெற்கு- ஏ.விசாலாட்சி. 11. சீர்காழி-மா.சக்தி, 12. தூத்துக்குடி- ஜெனீபர் சந்திரன், 13. ராதாபுரம்- சசிகலா புஷ்பா. அ.தி.மு.க. போட்டியிடும் 160 தொகுதிகளில் 26 தொகுதிகள் தனித் தொகுதிளாகும்.
இதில் விடுதலை சிறுத்தைகளை எதிர்த்து 7 தனித்தொகுதிகளில் அ.தி. மு.க. களம் இறங்கி உள்ளது. 160 வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த தேர்தலில்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராணிப்பேட்டை, ஆவடி ஆகிய 2 தொகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. அமைச்சரவையில் கடந்த காலங்களில் இடம் பெற்றிருந்தவர்களில் பொன்னையன், தளவாய் சுந்தரம், ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், ஆர்.ஜீவானந்தம், உள்பட சிலர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், செ.ம.வேலுச்சாமி, நயினார் நாகேந்திரன் உள்பட 15-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க.வின் 160 வேட்பாளர்களில் 5 பேர் டாக்டர்கள், மனோகரன் என்ற பெயரில் 4 வேட்பாளர்களும், கருப்பையா என்ற பெயரில் 3 வேட்பாளர்களும் உள்ளனர். செந்தில், கருப்பசாமி, காமராஜ் என்ற பெயர்களில் தலா 2 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களில் ஒருவரது பெயர் நீதிபதி (உசிலம்பட்டி), திருமயம் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் வைரமுத்து. அ.தி.மு.க. வேட்பாளர்களில் குப்புசாமி, முனிசாமி, பழனிசாமி என்று சாமியில் முடியும் பெயர் கொண்ட வேட்பாளர்கள் 16 பேர் உள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.