ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தொடர் கண்காணிப்பு : குரேஷி உறுதி
சென்னை : ""தேர்தல் நடைபெற உள்ள மற்ற மாநிலங்களை போல, தமிழகத்தில் ஓட்டுச் சாவடியை கைப்பற்றுவது உள்ளிட்ட வன்முறைகள் அதிகம் இல்லை. அதனால் தான், இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் இங்கு தான் உள்ளது. இதை தடுக்க, தேர்தல் கமிஷன் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார்.
தமிழகத்தில், அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய, நேற்று காலை சென்னை வந்த தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, தேர்தல் கமிஷனர்கள் பிரம்மா, சம்பத் ஆகியோர், அரசியல் கட்சி பிரமுகர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
நேற்று மாலை, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அளித்த பேட்டி:அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடமும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடமும் விரிவான ஆலோசனை நடத்தினோம். தமிழகத்தில் பண வினியோகத்தை தடுக்க, தேர்தல் கமிஷன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, அரசியல் கட்சிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. சில அதிகாரிகள் நடுநிலையாக செயல்படவில்லை என, புகார் தெரிவிக்கப்பட்டது. இதை கவனத்தில் கொண்டுள்ளோம்.எல்லா ஓட்டுச்சாவடியிலும் வெப் கேமரா பொருத்த வேண்டும்; வாக்காளர்களுக்கான பூத் "சிலிப்'புக்களை ஏழு முதல் 10 நாட்களுக்கு முன் வினியோகிக்க வேண்டும்; மூத்த குடிமக்களுக்கு ஓட்டுச்சாவடியில் தனி வரிசை வேண்டும்; வெயிலில் நிற்பதை தவிர்க்க, பந்தல் அமைக்க வேண்டும்; பிரசாரத்தின் போது தனி மனித விமர்சனங்கள் இருக்கக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகள் அரசியல் கட்சிகள் தரப்பில் வைக்கப்பட்டுள்ளன.தனி மனித விமர்சனம் குறித்து தேர்தல் நன்னடத்தை விதியில் தெளிவாக உள்ளது. ஓட்டுச்சாவடியில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை, தேர்தல் கமிஷன் செய்து கொடுக்கும்.
தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வினியோகம், 99 சதவீதம் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள வாக்காளர்களுக்கும் தேர்தலுக்குள் இவை வினியோகம் செய்யப்படும். கட்சித் தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களிலும் பிரசாரம் செய்வர்.இதனால், தலைவர்கள் பெயரில் தனியாக வாகனங்களுக்கு பெர்மிட் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். இது குறித்து பரிசீலிக்கப்படும். அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் வாக்காளர்ளுக்கு ஓட்டுப் போடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்யப்படுவதை தடுப்பது தேர்தல் கமிஷனுக்கு சவாலான விஷயம் தான். இதற்காக ஏற்கனவே சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடியோ கண்காணிப்பு, நிழல் வங்கி கணக்கு என, பீகார் பார்முலா இந்த தேர்தலில் மெருகூட்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துள்ள பல தேர்தல்களில் பண வினியோகம் அதிகமாக இருந்தது. இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்தது. தற்போதைய தேர்தலில் பணம் வினியோகம் குறித்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை பறக்கும் படையினர் கைப்பற்றியிருப்பது குறைந்த அளவு தொகை தான். தேர்தல் நெருங்கும் போது, அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு ஆயத்தமாகும் போது, தேர்தல் கமிஷன் பண வினியோகத்தை தடுக்கும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தும். இதன் மூலம், வரும் நாட்களில் பறக்கும் படையிடம் சிக்கும் பணம் மேலும் அதிகரிக்கும்.
வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர், "பூத் சிலிப்' வழங்கும் போது, பணம் வினியோகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படும். நெடுஞ்சாலைகளில் மட்டுமே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர் என்பது தவறான கருத்து. உட்புற பகுதிகளிலும் கண்காணிக்கிறோம்.இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. நாடு முழுவதும் இம்முறை பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் 11 மணிவரை பிரசாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தல் கமிஷன் மீடியாவை சார்ந்துள்ளது.தேர்தல் கமிஷன் சார்பில் ஆயிரக்கணக்கான வீடியோகிராபர்கள் களத்தில் இறக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் விதிமீறல், முறைகேடுகள் குறித்து தொலைக்காட்சி, பத்திரிகைகளின் வெளியிடும் செய்திகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்படும்.
மத்திய அமைச்சர் அழகிரி தேர்தல் விதிமுறை மீறியது குறித்து, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கியது. இதற்கு விளக்கம் அளித்து அழகிரி கடிதம் எழுதியுள்ளார். அவர் இனி தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி நடப்பதாக உறுதியளித்துள்ளார். ஓட்டுப் பதிவிற்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் இடையே ஒரு மாதம் இடைவெளி இருப்பது குறித்து பிரச்னை இல்லை. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கடுமையான பாதுகாப்பில் வைக்கப்படும். "சிசி' கேமரா மூலம் ஓட்டு எண்ணும் மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
பறக்கும் படையினரிடம் பொதுமக்களின் பணம் சிக்கும் போது, பணத்திற்கான உண்மையான ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனு தாக்கல் முடிந்து, வேட்பாளர் இறுதி செய்யப்பட்ட பிறகு தான், வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கிடப்படும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுமே கோரிக்கை வைத்தன. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஓட்டுச்சாவடியை கைப்பற்றுவது போன்ற வன்முறைகள் இல்லை. இதனால் தான், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.சில அதிகாரிகள், ஒரு சாராருக்கு சாதகமாகச் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன; இது குறித்து விசாரணை நடத்தப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்த்து, தேர்தல் கமிஷனின் விதிமுறையை கடைபிடித்து, தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைக்குமாறு அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டது. இதற்கு அரசியல் கட்சிகளும் உறுதியளித்துள்ளனர்.இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார்.
பேட்டியின் போது தேர்தல் கமிஷனர்கள் பிரம்மா, சம்பத் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா உள்ளிட்டோர் இருந்தனர்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.