இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, February 20, 2011

hadees and gk

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாமமும்
செய்வதில்லை.எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் 
செய்து கொள்கிறார்கள்.
 
                                         அல் குர் ஆன் - 10 : 44
 
அல்லாஹ் எத்தகையவன் என்றால், வானங்களில் உள்ளவையும்
பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமாகும்.இன்னும் (இதை)
நிராகரிப்போருக்கு கடினமான வேதனையினால் பெருங்கேடு தான்.
 
                                       அல் குர் ஆன் - 14 : 2   
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பயணம்
வேதனையின் ஒரு துண்டாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் 
பானத்தையும் அது தடுத்துவிடுகிறது. ஆகவே உங்களில் ஒருவர் 
தாம் நாடிச் சென்ற பயண நோக்கத்தை முடித்து விட்டால்,உடனே 
அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்து செல்லட்டும்.
 
                                             நூல் : முஸ்லிம் : 3892
 
நிச்சயமாக இந்த குர் ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல்லவழியைக் காட்டுகிறது.அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஸ்லிம்களுக்கு நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு
என்றும் நன்மாராயங் கூறுகிறது.
 
                                                அல் குர் ஆன் - 17 : 9
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்து விட்டு (முதலில்)
பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
 
                                                    நூல் : புஹாரி : 881
 
அனைத்துப் புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும்  படைத்து 
வளர்த்து பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
 
                                                      அல் குர் ஆன் : 1 : 1 
 
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்கருமங்களைச் செய்து, 
தொழுகையை நியாயமாக கடைப்பிடித்து. ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ,நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நற்கூலி இருக்கிறது.
 
                                                    அல் குர் ஆன் - 2 : 277
 
பூமியை உழுது நீங்கள் பயிரிடுகின்றதை கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது அல்லாஹ் 
ஆகிய நாம் முளைக்கச் செய்கிறோமோ?
 
                                             அல் குர் ஆன் - 56 : 63,64 
 
மக்களிடம் நெருக்கமாகவும் மென்மையாகவும் எளிமையாகவும்
நடப்பவருக்கு நரகம் ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி) நூல் : அஹமத்
 
நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதைப் பருகுங்கள்.
ஆனால் ஒரு நிபந்தனை உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது என நபி (ஸல்) கூறினார்கள்.
 
 அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : புஹாரி 
 
இன்பமும், துன்பமும் வரும் போகும்,ஆனால் வந்தால் போகாதது புகழும், பழியும் ஆகும்.
 
பணத்தை விட நல்ல அறிவும், நல்ல ஒழுக்கமும் மிகவும் உயர்ந்தது.
 
பணத்தின் மதிப்பை அறிய யாரிடமாவது கடன் கேட்டுப்பார்.
 
பணம் புத்திசாலிக்கு உழைக்கும் ஆனால் முட்டாளை அது ஆட்கொள்ளும்.                 
                                      
  
      

--
Warm Regards

Mohamed Aboobacker

Mobile:  +91-9994509779
Office :  +91-04373-240003
e-mail :  aboobacker@amazonwp.com
Web  :   www.amazonwp.com

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.