காரியாபட்டி, பிப். 24-
விருதுநகர் மாவட்ட முற்போக்கு மாணவர் கழக செயலாளரும், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலருமான இனியவன்-முனீஸ்வரி ஆகியோரது திருமணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒரு கட்சியின் கட்டுப்பாட்டை மதிப்பது, அந்த கட்சியின் தலைமை கோட்பாடு, கொள்கைகளை மதிப்பது போன்ற மனப் பக்குவத்தை தொண்டர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பா.ம.க. தலைவர் ராமதாஸ் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும் அதே போல அக்கட்சியின் தொண்டர்கள் தலைவரின் ஆணையை மதித்து செயல் படுகிறார்கள். இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க. 31 தொகுதிகளை பெற்றுள்ளது. இது அக்கட்சிக்கு கிடைத்த அரசியல் அங்கீகாரமாகும்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தலித் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு சிதறிக்கிடந்த தலித் சமுதாயத்தை ஒன்று திரட்டி அவர்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுத் தருவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தலித் சமுதாயம் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இணைந்து கருணாநிதியை மீண்டும் முதல்-அமைச்சர் பதவியில் அமர வைக்க பாடுபடுவோம். நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கும். குறிப்பாக தென் மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.