தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் படி வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காமராஜர் உள்நாட்டு முனையம் பகுதிக்கு மும்பையில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது.அதில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் அங்குமிங்கும் சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்து கொண்டிருந்தார்.அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வருமான வரித்துறையினர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது பெயர் வினோத் (28), மும்பையை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவர் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் 10 கிலோ தங்க நகை இருந்தது.அந்த நகைக்கான உரிய ஆவணங்கள் இல்லை.
அவரிடம் விசாரித்த போது மும்பையை சேர்ந்த ஒருவர் இந்த நகைகளை சென்னையில் உள்ள நபர் ஒருவரிடம் ஒப்படைக்க கொடுத்தனுப்பியதாக கூறினார்.நகைகளுக்குரிய ஆவணங்கள் இல்லாததால் வினோத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
10 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.