இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, February 24, 2011

தேர்தலில் யாரை நிறுத்தலாம்? பா.ஜ., தலைமை கருத்து கேட்பு

திருப்பூர் : வரும் சட்டசபை தேர்தலில், தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு மற்றும் தகுதியான வேட்பாளர் குறித்த கருத்து கேட்பு கூட்டம், பா.ஜ., சார்பில் திருப்பூரில் நேற்று நடந்தது; ஏழு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழக சட்டசபை குறித்து, பா.ஜ., மாவட்டம் வாரியாக, நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு நடத்தி வருகிறது. திருப்பூர், நீலகிரி, ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு, கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு ஆகிய ஏழு மாவட்ட நிர்வாகிகளிடம், திருப்பூரில் நேற்று கருத்து கேட்கப்பட்டது.

பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்க, அச்சடிக்கப்பட்ட படிவம் ஒன்று அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதை நிரப்பும் நிர்வாகி, குறிப்பிட்ட தொகுதியில் பா.ஜ., போட்டியிடலாமா, போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், போட்டியிட வேண்டாம் என்றால் அதற்கான காரணம் ஆகியவற்றை எழுத வேண்டும்.

கட்சி போட்டியிட்டால் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று, முன்னுரிமை அடிப்படையில், ஒரு பெண் உட்பட, மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரை செய்யப்படுவதன் காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். இப்படிவங்கள் அனைத்தும் பெறப்பட்டு, கட்சி தலைமைக்கு அனுப்பவும், அதன் அடிப்படையில் தேர்தலை சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மாநில தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் சுகுமாரன் நம்பியார், லட்சுமணன், மோகன் ராஜூலு, மாநில பொது செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ஜோதீஸ்வரி கந்தசாமி, செயலர் செல்வகுமார், பொருளாளர் கோவிந்த குமார், மாவட்ட தலைவர் மணி உட்பட நிர்வாகிகள் பேசினர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.