இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, February 24, 2011

தனித்து போட்டியிட்டாலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்; இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேச்சு

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருவி பாபு தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் ஜாகீர் அப்பாஸ் முன்னிலை வகித்தனர்.
 
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் பிரிவர்த்சிங், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் யுவராஜா பேசியதாவது:-
 
தமிழகத்தில் 63 லட்சம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகமானது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டாலே ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இருக்காது.
 
வரும் பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும். அப்போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிக சீட் வழங்கப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முன்றில் ஒரு பங்கு சீட்டு வழங்க வேண்டும்.
 
முக்கியமாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும். 10 மாதத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிக காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளோம். தற்போது காங்கிரஸ் கட்சியில் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பாடுகிறார்கள்.இது நமது கட்சிக்கு அதிக பலத்தை அளிக்கிறது.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பொது செயலாளர் தமிழ்செல்வன், சட்டமன்ற தொகுதி தலைவர்கள் தீனத்குமார், சுதாபிரசாத், நரேஷ்குமார், ஜெயசரவணன், துணை தலைவர்கள் செல்வராஜ், விஜய்ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாராளுமன்ற துணை தலைவர் மகேஷ் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.