பெங்களூரு: கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் 2 வது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடக்கிறது. முதல் போட்டியில் வங்கேதேசத்தை அபார வெற்றிக்கொண்ட இந்தியா 2 வது போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது. இந்த போட்டி க்கான டிக்கட் விற்பனை சின்னசாமி ஸ்டேடியத்தில் துவங்கியது.
டிக்கட் வாங்க நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விற்பனை துவங்கிய சில மணிநேரத்தில் டிக்கட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இதனால ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கவுன்டர் நோக்கி முன்னேறினர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனையடுத்து போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் பரபரப்பு நிலவியது. பலர் அடிபட்டு ஓடுவது பரிதாபமாக இருந்தது.
இந்த மைதானத்தை பொறுத்தவரை 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கமுடியும். ஆனால் 4 ஆயிரம் டிக்கெட் மட்டும் விற்பனைக்கு வந்தன. இதனால் பலருக்கு கிடைக்காமல் போனது. ஏனைய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், பிளாக்கிலும் விற்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் போட்டி நடத்தும் கமிட்டி மீது உலக கோப்பை கிரிக்கெட் மத்திய கமிட்டிக்கு புகார் அனுப்பினர். டிக்கட் வாங்க நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விற்பனை துவங்கிய சில மணிநேரத்தில் டிக்கட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இதனால ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கவுன்டர் நோக்கி முன்னேறினர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனையடுத்து போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் பரபரப்பு நிலவியது. பலர் அடிபட்டு ஓடுவது பரிதாபமாக இருந்தது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.