அதிராம்பட்டினத்தில் 14ம் ஆண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழா ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.
அதிராம்பட்டினம, லாவண்யா திருமண மண்டபத்தில், அதிரை வள்ளல் அண்ணாவியார் குலப் புலவர்கள் ஹாஜி காதிர் முகைதீன் அரங்கத்தில் விழா நடைபெறுகிறது.
இன்று மாலை 4 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத் தலைவர் தமிழ்மாமணி முனைவர் அ.அய்யூப் தலைமை தாங்குகிறார்.
இஸ்லாமியப் பாடல்களை இசையருவி, தமிழ்மாமணி சென்னை குமரி அபூபக்கர், கலைமாமணி ஹாஜி குல்முஹம்மது ஆகியோர் பாடுகின்றனர்.
வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் தொடக்க உரை நிகழ்த்துகிறார்.அதன் பின்னர் பல்வேறு நூல்கள் வெளியிடப்படுகின்றன.
இரவு 7 மணிக்கு மகளிர் அரங்கம் நடைபெறுகிறது. இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக மகளிர் பிரிவுத் தலைவர் பேராசிரியர் நசீமா பானு தலைமை தாங்குகிறார். சென்னை முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நசீமா சிக்கந்தர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
ஏப்ரல் 4ம் தேதி சனிக்கிழமையன்று பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் இடம் பெறுகின்றன. இதில், இக்கால இலக்கியங்கள் என்ற தலைப்பிலான அமர்வில், முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை நசீமா சிக்கந்தர், திருமறை – நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் என்ற தலைப்பில் பேசுகிறார்.
சனிக்கிழமை மாலை நாலரை மணிக்கு ஊடகங்கள் சமுதாயத்தைச் சீராக்குகின்றனவா சீரழிக்கின்றனவா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில், சீராக்குகின்றன என்ற தலைப்பில் பேராசிரியை நசீமா சிக்கந்தர், முனைவர் நத்தர்சா, பேராசிரியர் செய்யது முகம்மது கபீர் ஆகியோரும், சீரழிக்கின்றன என்ற தலைப்பில் முனைவர் அகமது மரைக்காயர், சவ்தா உம்மாள், ஹிதாயத்துல்லா ஆகியோரும் பேசுகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் விழா நிறைவுப் பேருரையாற்றுகிறார்.
Friday, April 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.