நீலகிரி மாவட்டத்தில் தே.மு.தி.க., வில் நடக்கும் பனிப்போரால் அக்கட்சி தேய்பிறையாக மாறிவருவதால் தொண்டர்கள் உற்சாகம் இழந்துள்ளனர். கடந்த 2006 சட்டசபை தேர்தலில் முதன் முறையாக களம் இறங்கிய தே.மு.தி.க., நீலகிரி மாவட்டத்திலும் வேகமாக வளர்ந்து வந்தது. ஊட்டி, குன்னூர், கூடலூர் என மூன்று தொகுதிகளிலும் தே.மு.தி.க., வேட்பாளர்கள் களமிறங்கி, கணிசமான ஓட்டுகளை பெற்றனர். கட்சியில், இளைஞர்கள், பெண்கள் பெருமளவில் இணைந்தனர். லோக்சபா தேர்தலுக்கு பின், தே.மு.தி.க.,வின் வளர்ச்சி மெல்ல.. மெல்ல.. வீழ்ச்சியை நோக்கி சென்றன. கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்ட கோஷ்டி பூசலால், நிர்வாகிகள், தொண்டர்கள் கொத்து, கொத்தாக கட்சியில் இருந்து விலகி பிற கட்சிகளில் இணைந்தனர். சட்டசபை தேர்தலுக்கு பின், கோஷ்டி பூசல் உச்சத்தை தொட்டுள்ளது.
கூடலூர் சட்டசபை தொகுதியில் களம் இறங்கிய கட்சியின் மாவட்ட செயலர் செல்வராஜ், தோல்வியை தழுவினார்; இந்த அதிருப்தி அலை ஒருமிருக்க, நீலகிரி மாவட்ட தே.மு.தி.க., துணை செயலராக இருந்த தம்பி இஸ்மாயில், பந்தலூர் ஒன்றிய செயலர் கபிரியேல், குன்னூர் அருகேயுள்ள உபதலை ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் மீது கட்சி மேலிடம் திடீரென நடவடிக்கை எடுத்தது.இதற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை மாவட்ட செயலர் அரவணைத்து செல்லாதததும், மாநில தோட்ட தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் ஆலோசனைப்படி நடப்பதும் தான் காரணம் என குற்றம் சுமத்தினர். உள்ளாட்சி தேர்தலுக்குள் தே.மு.தி.க.,வின் உச்சகட்ட கோஷ்டி பூசலை கட்சி மேலிடம் சரிசெய்தால் மட்டுமே நீலகிரியில் "முரசு சப்தம்' ஒலிக்கும் என்கின்றனர் கட்சி தொண்டர்கள்.
Sunday, July 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.