இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, July 12, 2011

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு : திமுகவிற்கான இடம் காலியாகவே உள்ளது: பிரதமர்

புதுடில்லி: மத்திய அரசில் மாற்றி அமைக்கப்படு புதிதாக அறிவிக்கப்பட்ட மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று மாலை 5 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் நடந்த எளிய விழாவில் பிரதமர், மூத்த அமைச்சர்கள் மற்றும் காங்., தலைவர் சோனியா உள்பட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். அமைச்சரவையில் தமக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் திருப்தி அளிக்கவில்லை என ஸ்ரீகாந்த்ஜெனா , குருதாஸ் காமத் ஆகிய இருவரும் இன்று மாலை நடந்த பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை.


திமுகவிற்கான இடம் காலியாகவே உள்ளது: பிரதமர் பேட்டி: காங்கிரஸ் ஆட்சியின் செயல்திறன் மற்றும் மாநிலத்தில் அதின் பங்களிப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்கள் பதவியேற்புக்கு பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, இது விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது நடைபெற்றுள்ள அமைச்சரவை விரிவாக்கம் இறுதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அமைச்சரவையில், திமுகவிற்கான 2 இடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளது. திமுகவின் நிலை மாறும் என்று நம்புகிறேன்.

இளம் எம்.பி.,யான ஜிதேந்திராசிங் ( உள்துறை இணை அமைச்சர் ) , கிஷேர் சந்திரா தேவ் ( மலைவாழ் பழங்குடி நலன் மற்றும் பஞ்சாயத் ராஜ்- காபினட் அமைச்சர்) ,பேனி பிரசாத் வர்மா ( உருக்கு துறை காபினட் ) , ‌‌ ஜெய்ராம்ரமேஷ் ( ஊரக மேம்பாடு காபினட் அந்தஸ்து) ராஜீவ்சுக்லா ( பார்லி., விவகாரம் துறை இணை அமைச்சர்) , மிலிந்த்தியோரா, சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சரண்தாஸ் மகந்த் ( வேளாண் மற்றும் உணவுத்துறை இணை அமைச்சர் ) திரிணாமுல் காங் ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுதீப்பந்தோபாத்யாயா ( சுகாதாரம் மற்றும் குடும்பநலம் இணை அமைச்சர் பொறுப்பு ) , சரண்தாஸ்மகந்த் , ஸ்ரீகாந்த்ஜெனா (புள்ளிஇயல் மற்றும் திட்டம்) , குருதாஸ் காமத் ( குடிநீர் மற்றும் கழிவுநீர்), பவன்சிங் பத்தோவர் உள்பட மொத்தம் 13 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேருக்கு காபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்துறை சல்மான்குர்ஷீத்துக்கும், ரயில்வே துறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ்திரிவேதிக்கும் ( காபினட் அந்தஸ்து) புதிதாக அமைச்சர் பொறுப்பு பெறும் தமிழகத்தை சேர்‌ந்தவரும் காங்., செய்தி தொடர்பாளருமான, ஜெயந்திநடராஜனுக்கு சுற்றுச்சூழல் துறையும், இணை அமைச்சர் தனிப்பொறுப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக மத்திய அமைச்சரவையில் மாற்றம், மாற்றம் என பேசி வந்த இந்த பிரச்னையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இன்று முடிவு ஏற்படுகிறது. ஜனாதிபதி- பிரதமரின் வெளிநாட்டு பயணம், மற்றும் உள்நாட்டு அரசியல் காரணமாக தள்ளிப்போனதில் காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுல் எண்ணத்திற்கேற்ப இன்று தீர்மானம் செய்யப்படுகிறது.

ஊழல் விவகாரம் மற்றும் ராஜினாமா விருப்பம், உள்ளிட்ட காரணங்களினால் பல அமைச்சர்கள் கூடுதல்பொறுப்பாக ஒரு சில துறைகளை கவனித்து வருகின்றனர். அமைச்சரவையில் என்ன நடந்தாலும் இதற்கு பொறுப்பு பிரதமரே என்றும் இது தொடர்பான விளக்கம் அளிக்கும் கடமை பிரதருக்கே உள்ளது என்றும் எதிர்தரப்பினர் அவ்வப்போது நினைவு படுத்தி வருவதால் பிரதமர் இந்தமுறை அமைச்சரவை பட்டியல் செய்ய காலம் தாமதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது 4 முக்கியப்புள்ளிகளாக கருதப்படும் பிரணாப்முகர்ஜி ( நிதித்துறை), ப.சிதம்பரம் (உள்துறை), ஏ.கே.அந்தோணி (பாதுகாப்பு), எஸ்.எம்., கிருஷ்ணா ( வெளியுறவு துறை) ஆகிய நான்கு பேர் துறையில் மாற்றம் இல்லை. மேலும் ராஜினாமா கேட்டுள்ள முரளிதியோரா விடுவிக்கப்படுகின்றனர். ராஜினாமா கொடுத்துள்ள தயாநிதி விலக்கல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

புதிதாக சேர்க்கப்படும் பெயர்கள் : மலிந்தியோரா (முரளிதியோராவின் மகன்) இவரிடம் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது. , ஜெயந்திநடராஜனுக்கு சுற்றுச்சூழல்துறை தனிப்பொறுப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைஅமைச்சராக இருந்த தினேஷ்திரிவேதிக்கு ( ரயில்வே துறை ) காபினட் அந்தஸ்து வழங்கப்படுகிறது. தயாநிதி வகித்து வந்த ஜவுளித்துறை , வர்த்தக துறையை கவனித்து வரும் ஆனந்த்சர்மாவுக்கு கூடுதல் பொறுப்பாக ஜவுளித்துறை வழங்கப்படுகிறது. கபில்சிபல் தகவல்தொழில்நுட்பம், மற்றும் மனிதவளம் தக்க வைத்துக்கொண்டார்.

நீக்கப்படுவோர் பெயர் விவரம்: பி.கே., ஹந்திகியூ, காந்திலால்பூரியா, எம்.எஸ்.,கில், முரளிதியோரா, சாய்பிரதாப், அருண். எஸ்.யாதவ், தயாநிதி, பி.கே., பண்டிக் ஆகிய 7 பேர் நீக்கப்பட்டனர். இவர்களுடைய ராஜினமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உ .பி., மாநில தேர்தலை கருத்தில் கொண்டு இணைஅமைச்சராக இருக்கும் பேனிபிரசாத்துக்கு காபினட் அந்தஸ்து வழங்க கட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

கீழ்வருவனவற்றில் வழங்கப்படும் புதிய பொறுப்புக்கள் அடைகுறிப்புக்குள் தரப்பட்டுள்ளது. சட்டஅமைச்சர் வீரப்ப மொய்லி ( கம்பெனி விவகாரம்) , சுற்றுச்சூழல் துறை ஜெய்ராம்ரமேஷ் ( கிராமப்புற மேம்பாடு) , சிறுபான்மை துறை சல்மான்குர்ஷீத் ( சட்டத்துறை ) , ஊரகவளர்ச்சி துறை அமைச்சராக இருந்து வந்த விலாஸ்ராவ் தேஷ்முக் ( அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ) ரயி்ல்வே துறை இணை அமைச்சராக கவனித்து வந்த முகுல்ராய் (கப்பல்துறை இணை அமைச்சர்) பொறுப்புகள் வழங்கப்படுகிறது. பார்லி., விவகாரத்துறை கவனித்து வரும் பவன்குமார்பன்சிலாலுக்கு கூடுதல் பொறுப்பாக நீர்ஆதாராம் வழங்கப்படுகிறது. பார்லி., இணை அமைச்சராக இருந்த நாராயணசாமியிடம் ( புதுச்சேரியை சேர்ந்தவர் ) இருந்து பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., நிலை என்ன ? கருணாநிதி பேட்டி சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக 2 அமைச்சர் பதவியை இழந்து நிற்கும் தி.மு.க., இதுவரை இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஆர்வம் காட்டவில்லை. யாருக்கும் புதிய வாய்ப்பு இந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு கிடைக்காது என்று நிலை உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள தி.மு.க.,தலைவர் கருணாநிதி கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு பதிலாக, அமைச்சரவையில் இடம் வேண்டும் என தான் பிரணாப் முகர்ஜியிடம் கேட்கவில்லை. மேலும் மத்திய அமைச்சரவை மாற்றம் முடிந்துவிடவில்லை என்றும், மாற்றம் குறித்து முறையான அறிவிப்பு வெளியான பின் கருத்து கூறுவதாகவும் தெரிவித்தார். அமைச்சரவை மாற்றம் மற்றும் மத்திய அரசுடனான இதர பிரச்னைகள் குறித்து கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசி முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.