திண்டுக்கல்: மண்ணெண்ணெய் வினியோகத்தை முறைப்படுத்த,சிலிண்டர் எண்ணிக்கை குறித்து, ரேஷன் கார்டுகளில் பதிய அரசு உத்தரவிட்டது. இப்பதிவு இரண்டு மாதத்திற்கு நடக்கும் என, அறிவுறுத்தப்பட்டது. பதிவு செய்ய, காஸ் ஏஜன்சிக்கு, நுகர்வோர் படையெடுத்தனர். நீண்ட வரிசை, தள்ளுமுள்ளு, தகராறு, மறியல் என, பிரச்னைகள் தலை தூக்கின. இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல், அதிகாரிகள் திணறி வந்தனர். ஒரு நாளுக்கு, 150 கார்டுகள் மட்டும் பதிவு செய்யும் நிலை ஏற்பட்டதால், நுகர்வோர் அவதிப்பட்டனர்.
இது குறித்து, சிவில் சப்ளை துறை செயலர் ஜிஜேந்திரன், வீடியோ கான்பரன்சிங் மூலம், மாவட்ட வழங்கல் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். இதில், நுகர்வோரின் அவதிகள் குறித்து விளக்கினர். இதனால் காஸ் ஏஜன்சியில் பதிய தடை விதித்து, செயலர் உத்தரவிட்டுள்ளார். காஸ் நுகர்வோர் பட்டியலை கம்ப்யூட்டரில் எடுத்து, ரேஷன் கார்டுடன் ஒப்பிட, காஸ் ஏஜன்சி, சிவில் சப்ளை துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sunday, July 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.