இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, July 25, 2011

2 ஜி ஊழல்: ராசாவின் வாதங்களை ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது-கபில்சிபல்

புதுடெல்லி, ஜூலை.25-
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மாஜி தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா டெல்லி நீதிமன்றத்தில் இன்று வாதாடினார். அப்போது 2 ஜி விவகாரத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை, மேலும் அவர், தான் எடுத்த தொலைத்தொடர்புத்துறை தொடர்பான நடவடிக்கைகள் தவறு என்றால் கடந்த 1993-ஆம் ஆண்டில் இருந்து தொலைத்தொடர்பு மந்திரிகளாக இருந்தவர்கள் அனைவரும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்.
கடந்த பாரதீய ஜனதா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையே நானும் பின்பற்றினேன் என்று கூறினார் ஆ.ராசாவின் வாதங்கள் இன்று முடிவடைந்த நிலையில், நாளையும் வாதங்கள் தொடர உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் நீதிமன்றத்தில் ராசா கூறும் வாதங்களை ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.