இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 27, 2011

தமிழக மீனவர்கள் விடுவிப்பு எப்போது ?

கொழும்பு ஜூன் 27-


இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்கள் விடுதலை பற்றி வரும் 1-ம் தேதி தெரியவரும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த 20-ந்தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வருகிற 1-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் அங்குள்ள அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் 27-ம்தேதி (இன்று ) விடுதலைசெய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் உத்தரவையடுத்து .தமிழக மீனவர்கள் விடுதலை பற்றி வரும் 1-ம் தேதி முடிவு தெரிய வரும் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.