இறைவனின் திருப்பெயரால்....

Pages

Friday, June 10, 2011

தி.மு.க.,வின் பழிவாங்கும் படலத்தில் காதி ஊழியர்: முதல்வர் உதவிக்கு எதிர்பார்ப்பு

மதுரை: தி.மு.க., ஆட்சியில் பழிவாங்கப்பட்டு, வேலையை இழந்த காதி மேலாளர் கணேசன், அ.தி.மு.க., அரசின் தயவில் பிழைப்பு ஊதியம் கிடைக்கும் என, எதிர்பார்த்துள்ளார்.

கடந்த 1997 தி.மு.க., ஆட்சியில், கதர்த்துறை அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் இல்ல நிகழ்ச்சி நடந்தது. மொய் எழுத, அனைவரையும் அறிவுறுத்திய நிலையில், காதி மேலாளர் கணேசன் மறுத்தார். இது குறித்து செய்தி வெளியாகி, விசாரணை நடந்தது. உண்மையை கூறிய கணேசனை, தர்மபுரிக்கு மாறுதல் செய்தனர். பழிவாங்கும் படலம் தொடர்ந்தது. கடந்த 1998 ஏப்., 6ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, கணேசன் தரப்பு விளக்கத்தை நிராகரித்து, 1999ல் டிஸ்மிஸ் செய்தனர். தி.மு.க., அமைச்சரை பகைத்ததால், பிழைக்க வழியின்றி கணேசன் குடும்பம் தவித்தது. "டிஸ்மிஸ் நடவடிக்கை செல்லாது,' என, சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. கதர் வாரியம் எதிர்த்து முறையிட்டதை, ரத்து செய்தது. "1999 முதல், பிழைப்பு ஊதியம் வழங்கவும்,' உத்தரவிட்டது. 12 ஆண்டு ஆகியும் இதுவரை வழங்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஜெ., பார்வை பட்டால், தமக்கு வரவேண்டிய பிழைப்பு ஊதியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், கணேசன் மற்றும் அவரது குடும்பத்தார் உள்ளனர்.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.