இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 5, 2011

ஊழலை எதிர்த்து கோவையிலும் இன்று உண்ணாவிரதம்

ஊழலை எதிர்த்து கோவையிலும் இன்று உண்ணாவிரதம்
கோவை: வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்திய கருப்பு பணத்தை மீட்டு, மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தி இன்று கோவையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

டெல்லியில் உண்ணாவிரதம்



நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நூறு நாட்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று வாக்குறுதிகள் சொல்லி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அந்த வாக்குறுதியை காற்றில் விட்டது.



ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், பாபா ராம்தேவ் தலைமையில், காலவரையற்ற உண்ணாவிரதம் டில்லியில் இன்று தொடங்கியுள்ளது. இதில் அன்னா ஹசாரே கலந்து கொள்ளவுள்ளார்.



பதஞ்சலி யோகா சமிதி



அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோவையிலும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடக்கிறது. தமிழ்நாடு ஓட்டல் முன்பு பதஞ்சலி யோகா சமிதி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.



இதுகுறித்து அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் பாலசுந்தரம் கூறுகையில், இப்போராட்டம், எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல. நாட்டை ஆட்டிப் படைக்கும் ஊழலுக்கு மட்டுமே எதிரானது.



நானூறு லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம், வெளிநாடுகளில் முடங்கியுள்ளது. அதை மீட்டெடுத்தால் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே பாகுபாடின்றி மக்கள் அனை வரும் ஊழலுக்கு எதிராக ஒன்று கூட வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.