புதுடில்லி: டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி போக்குவரத்து சங்கம், நாடு தழுவிய அளவில் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளது. டில்லியில் இன்று நடக்கவுள்ள கூட்டத்தில், இதுபற்றிய முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இதனால், லாரிகள் நாளை ஓடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதால், நாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக, சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும், கெரசின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் உயர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமையல் காஸ் மற்றும் கெரசின் விலை உயர்வால், நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கவலை அடைந்துள்ளனர். டீசல் விலை உயர்த்தப்பட்டது, லாரி போக்குவரத்து சங்கங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டீசல் விலையை திரும்ப பெறக் கோரி, நாடு தழுவிய அளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அகில இந்திய மோட்டார் காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளின் அவசர கூட்டம், டில்லியில் இன்று நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில், லாரி ஸ்டிரைக் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் முடிந்ததும், மத்திய அமைச்சர்கள் அல்லது உயரதிகாரிகளை சந்தித்து, விலை உயர்வை திரும்பப் பெறும்படி வலியுறுத்தவும், மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி.,) தலைவர் ஜி.ஆர். சண்முகப்பா கூறியதாவது: லாரிகளுக்கான சுங்க வரி, உதிரிபாகங்கள், டயர் ஆகியவற்றின் விலை ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில், டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, நிலைமையை மேலும் சிக்கலாக்கும். லாரி போக்குவரத்துக்கான மொத்த செலவில், டீசலுக்கு மட்டும் 70 சதவீதம் செலவாகிறது.இந் த விலை உயர்வு காரணமாக, லாரிகளுக்கான வாடகை கட்டணத்தை, 7லிருந்து 9 சதவீதம் வரை உயர்த்த வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்கள், இந்த வாடகை உயர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.தற்போதைய டீசல் விலை உயர்வு காரணமாக, ஒரு லாரிக்கு, ஒரு நாளைக்கு, தற்போது ஆகும் செலவை விட, கூடுதலாக டீசல் செலவு 500 ரூபாய் வரை ஆகும். நீண்டதூர சரக்கு போக்குவரத்தில் ஈடுபடும் லாரிகளுக்கு, தினமும் 120லிருந்து, 150 லிட்டர் வரை, டீசல் தேவைப்படும். எனவே, இந்த டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு சண்முகப்பா கூறினார்.
"சமையல் காஸ், டீசல், கெரசின் ஆகியவற்றின் விலை உயர்வு, திரும்ப பெறப்பட மாட்டாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. எனவே, இன்று நடக்கவுள்ள அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், ஸ்டிரைக் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டிரைக் முடிவு இன்று எடுக்கப்பட்டால், நாளை முதல் லாரிகள் ஓடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லாரி ஸ்டிரைக் நடக்குமானால், நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை, பல மடங்கு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும், டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணமும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் கூறுகையில்,"சமையல் காஸ், டீசல், கெரசின் ஆகியவற்றின் விலை உயர்வால், பணவீக்கம் 10 சதவீதத்தை எட்டும்' என, கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து, அத்தியாவசிய பொருட்கள் உட்பட, அனைத்து பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை காட்டுவதாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, மற்றொரு முக்கிய லாரி போக்குவரத்து சங்கமான, அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர் கூட்டமைப்பு, "டீசல் விலை உயர்வுக்கு, ஸ்டிரைக் நடத்துவதன் மூலம் தீர்வு காண முடியாது. மாற்று வழிகள் குறித்து யோசிக்கலாம்' என, தெரிவித்துள்ளது. ஏனெனில், மாநில அரசுகள் லாரிகள் கட்டணத்தை நியாயமான முறையில் ஒழுங்குபடுத்தினால் தொடர்ந்து சேவையாற்றலாம் என்பது இவர்கள் கருத்து. அதே சமயம், மாநில அரசுகள், டீசல் மீதான வரிக்குறைப்பை அமல்படுத்தலாம் என்றும், இவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.