இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 13, 2011

இன்னும் 20 ம் தேதி வரை கனி ஜெயிலி்ல் இருக்க வேண்டும்: விளக்கம் அளிக்க சி.பி.ஐ.,க்கு அவகாசம்

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க., எம்.பி., கனிமொழியின் ஜாமின் மனு மீதான இ‌ன்றைய விசாரணையில் தற்போது உள்ள நிலவரம என்ன என்று விளக்கம் அளிக்க சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் கால அவகாசம் வழங்கியுள்ளது.


கடந்த 20 ம் தேதி முதல் ஜெயிலி்ல் அடைக்கப்பட்டிருக்கும் கனி‌மொழி இன்றுடன் 25 நாள் அவஸ்தை பட்டுள்ளார். இன்றாவது ஜாமின் கிடைக்குமா என்ற எதிர்பர்ப்புகளுடன் தி.மு.க., வின் முக்கியப்பபுள்ளிகள் டில்லியில் முகாமிட்டிருந்தனர். ஆனால் ஜாமின் கிடைக்கவில்லை. இது தொடர்பான நிலவரம் குறித்து கோர்ட்டில் தெரிவிக்க சி.பி.ஐ.க்கு.,வரும் 20 ம் தேதி வரை அவகாசம் கொடுத்து விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற டி.பி.ரியாலிட்டி நிறுவனம், தன் துணை நிறுவனங்கள் மூலம், பிரதிபலனாக 200 கோடி ரூபாயை கலைஞர் "டிவி'க்கு வழங்கியது. இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., இரண்டாவது குற்றப்பத்திரிகையில், கலைஞர் "டிவி' பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி., கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சேர்த்தது. இதை தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 20ம் தேதி முதல் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கனிமொழியும், சரத்குமாரும் ஜாமின் கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். "இருவரையும் ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது' எனக் கூறி, நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தார்.இதை தொடர்ந்து கனிமொழியும், சரத்குமாரும் ஜாமின் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதன் மீதான விசாரணை இன்று நடக்கிறது.

தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறையாக உள்ளது.விடுமுறை கால கோர்ட் நீதிபதி பி.எஸ். சவுகான், ஸ்வாட்ந்தர் குமார் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.