ஜெ. பிரச்சார வேனின் சிறப்பு வசதிகள்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 24-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். வழக்கமாக வேனில் அமர்ந்தபடி பிரசாரம் செய்யும் ஜெயலலிதா இந்த முறை வேனில் மேல் கூரையை திறந்து வந்து பேசுகிறார்.
இதற்காக வேனின் உள்புறம் உள்ள இருக்கை மேல் நோக்கி உயரும் வகையில் விசேஷ வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. அவர் பேசி முடித்த பிறகு அந்த இருக்கை வேனுக்குள் சென்று மேல் கூரை மூடி விடுகிறது.
ஹைடிராலிக் எந்திரம் மூலம் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருக்கைக்கு மேல்புறம் சிறிய மேல்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 5 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இருக்கையை சுற்றி 3 புறங்களும் கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் அவர் பேசுவதற்கான குறிப்புகள் அடங்கிய பேப்பர்கள் வைத்துக்கொள்ள சிறு பலகை உள்ளது.
முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதா பகல் முழுவதும் உள்ளே அமர்ந்து பேசுகிறார். மாலை 6 மணிக்கு பிறகு முன்பக்க இருக்கையில் இருந்து எழுந்து விசேஷ இருக்கைக்கு சென்று பேசுகிறார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 24-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். வழக்கமாக வேனில் அமர்ந்தபடி பிரசாரம் செய்யும் ஜெயலலிதா இந்த முறை வேனில் மேல் கூரையை திறந்து வந்து பேசுகிறார்.
இதற்காக வேனின் உள்புறம் உள்ள இருக்கை மேல் நோக்கி உயரும் வகையில் விசேஷ வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. அவர் பேசி முடித்த பிறகு அந்த இருக்கை வேனுக்குள் சென்று மேல் கூரை மூடி விடுகிறது.
இருக்கையை சுற்றி 3 புறங்களும் கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் அவர் பேசுவதற்கான குறிப்புகள் அடங்கிய பேப்பர்கள் வைத்துக்கொள்ள சிறு பலகை உள்ளது.
முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதா பகல் முழுவதும் உள்ளே அமர்ந்து பேசுகிறார். மாலை 6 மணிக்கு பிறகு முன்பக்க இருக்கையில் இருந்து எழுந்து விசேஷ இருக்கைக்கு சென்று பேசுகிறார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.