60 தொகுதிகளிலும் தோற்கடிக்க காங்கிரசுக்கு எதிரான யுத்தம்: சீமான் பேச்சு
Kanyakumari ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 27, 6:47 PM IST
திசையன்விளை, மார்ச். 27-
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்யப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டைரக்டர் சீமான் அறிவித்தார். அதன்படி நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. திசையன் விளையில் நடந்த கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு ராதாபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேல்துரையை எதிர்த்தும், அந்த தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர் மைக்கேல்ராயப்பனை ஆதரித்தும் பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழக சட்டமன்றதேர்தல் தமிழ் தேசிய இயக்கத்தின் எதிரி காங்கிரசிற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நடக்கும் அரசியல் யுத்தம். இதில் வெற்றி பெற எங்கள் தாய் தமிழன், தாய் தந்தையர்கள், அக்கா, தங்கைகள் வாழ்த்தி கொண்டிருக்கின்றனர். வெள்ளையனே வெளியேறு என வீர முழக்கமிட்ட நெல்லை சீமையின் புலித் தேவர் பிறந்த மண்ணில் இருந்து காங்கிரசை வீழ்த்த திசையன்விளையில் அரசியல் யுத்தம் தொடங்கியுள்ளோம்.
இந்த தொடக்கம் காங்கிரசுக்கு அடக்கம். எங்களை பார்த்து காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தாமதமாக அறிவித்தனர். காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த காங்கிரஸ் இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல. வ.உ.சிதம்பரனாரை அவமானப்படுத்திய கட்சி காங்கிரஸ். காமராஜரை கைது செய்ய சொன்ன கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் தோல்வி, நாம் தமிழர் கட்சியின் வெற்றி.
110கோடி இந்தியர்கள் இருக்கையில் இத்தாலியில் இருந்து வந்த சோனியா ஆட்சி செய்கிறார். எனவே சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். முன்னதாக அவர் பிரபாகரனின் தாயார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.