"இனி மத்திய அரசுக்கு பிரச்னைகள் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவோம், சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற முடியாது' என, சென்னையில் நடந்த தி.மு.க., உயர்மட்ட செயல் திட்ட குழுவில் எடுத்த முடிவு, அடுத்த சில நாட்களிலேயே டமால் ஆனதற்கு காரணம் அழகிரியின் முயற்சி தான் என தெரியவந்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் முதலில் இடம் பெற்றன. இதில் எந்த கட்சிக்குமே திருச்சிக்கு கீழே தென் மாவட்டங்களில் ஓட்டு வங்கியே கிடையாது. கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் தி.மு.க., கூட்டணிக்கு உள்ள ஒரே பலம் காங்கிரஸ் தான். இந்த மாவட்டங்கள் எல்லாமே மத்திய அமைச்சர் அழகிரியின் பொறுப்பில் உள்ளன. காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க., தேர்தலை சந்தித்தால் இந்த மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட தி.மு.க.,வுக்கு கிடைக்காது. வட மாவட்டங்களில் மட்டும் தி.மு.க.,வுக்கு தொகுதிகள் கிடைக்கும்.அங்கு நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள். எனவே, தேர்தலுக்குப் பின் அமையும் சட்டசபையில் அழகிரிக்கு ஆட்களே இருக்கமாட்டார்கள். கட்சியிலும் ஸ்டாலின் கை ஓங்கிவிடும். இந்த பின்னணியில் தான் ராஜினாமா என்ற மிரட்டலுடன் டில்லி வந்து இறங்கினர் தி.மு.க., அமைச்சர்கள்.
அதன் பின் நடந்த காங்கிரஸ் - தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை ஏறக்குறைய டி-20 கிரிக்கெட் மேட்சை விட அதிக பரபரப்பாக இருந்தது. முடிந்து விடும் என்று நினைக்கும் போது, அதிரடியாக பிரச்னை ஏற்படும். அவ்வளவு தான், ஊத்திக் கொண்டது தொகுதி பங்கீடு என்று செய்தி வெளியாகும் தறுவாயில், திடீரென காட்சி மாறும்.
தி.மு.க., எம்.பி., மீது பிரணாப்பின் கோபம்! திங்கள் காலை தி.மு.க., அமைச்சர்கள் டில்லி வந்தனர். காலை 11 மணிக்கு, பார்லிமென்டில் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த சந்திப்பு நிகழவில்லை. காரணம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் முயற்சி. இவர், முதல்வர் கருணாநிதியுடன் பேச முயற்சித்து, கருணாநிதி அருகே அப்போது அமர்ந்திருந்த ஒரு தி.மு.க., எம்.பி.,க்கு போன் செய்தார். எதற்கு அவசரப்படுகிறீர்கள்? சற்று பொறுங்கள் என்று சொன்னார் பிரணாப். தி.மு.க., எம்.பி.,யோ எஸ் சார்... நோ சார்... என்றாராம்.தி.மு.க., தலைவரிடம் "பிரணாப் நோ என்கிறார்' என்று சொன்னார். அடுத்த முனையில், இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரணாப், "எதற்கு தவறாக மொழி பெயர்க்கிறீர்கள். நான் பேசுவதை ஒழுங்காக மொழிபெயர்ப்பு செய்து சொல்லுங்கள்' என்று கோபத்துடன் கத்தியதோடு, போனை கருணாநிதியிடம் கொடுங்கள் என்றார். ஒரு நாள் தவணை கொடுங்கள் என்று கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டார் பிரணாப்.
அழகிரியின் முயற்சி : டில்லி என்றாலே, வேண்டாம் என்று தவிர்த்துக் கொண்டிருந்தவர் அழகிரி. ஆனால், பிரணாப் முகர்ஜியுடன் இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தினார். காங்கிரசின் பிரச்னையை அறிந்து கொண்டதோடு, தி.மு.க.,வின் நிலையையும் தெரிவித்துவிட்டு, தீர்வு காண முயற்சித்தார் அழகிரி. உடனே விவரங்களை கருணாநிதியிடமும் தெரிவித்தார். அதோடு சற்று கறாராகவே, காங்கிரசோடு கூட்டணி தொடர்ந்தால் தான் நல்லது என்று முதல்வரிடமும் சொன்னார் அழகிரி.
சோனியா டோஸ் : திங்களன்று இரவு அழகிரி வீட்டு வாசலில் காத்திருந்த மீடியா சென்ற பிறகு, அதிரடியாக சோனியாவை சந்திக்க சென்றார் அழகிரியும், மற்றொரு அமைச்சரும். சோனியாவின் அறைக்குள் நுழைந்ததுமே இவர்களுக்கு அதிர்ச்சி. காரணம், சோனியாவின் இறுக்கமான முகம். "ஏழு வருடமாக உங்களுடன் நட்புடன் இருந்ததற்கு, இது தான் உங்கள் பதிலா? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், நீங்களாகவே பதவி விலக முடிவெடுத்து, மீடியாவில் அறிவித்துவிட்டீர்கள். காங்கிரசை அவமானப்படுத்தி விட்டீர்கள். ஏன் என்னிடம் பேசவில்லை?' என, சோனியா பொரிந்து தள்ள, பதில் சொல்ல முடியாமல் இருவரும் அமர்ந்திருந்தனர். "தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடுவீர்களா?' என, கிண்டலாக கேட்டார் சோனியா. உங்களுடைய செயலுக்கு நீங்கள் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். அனைத்தையும் கேட்டுக் கொண்டு, தி.மு.க.,வின் நிலையை எடுத்துச் சொன்னார் அழகிரி. காங்கிரசோடு கூட்டணியில் இருக்கவே விரும்புகிறோம் என்று அழகிரி பதில் சொல்லிவிட்டு, தி.மு.க., தலைவரிடம் பேசி நல்ல முடிவை எடுக்கிறோம் என்று சொல்லி, இடத்தை காலி செய்தனர் தி.மு.க., அமைச்சர்கள்.
சி.பி.ஐ., விவகாரம் : தி.மு.க., 60 தொகுதிகள் தர தயாராக இருக்க, காங்கிரஸ் 63 கேட்க, வெறும் 3 தொகுதிகளுக்காக, இந்த ராஜினாமா நாடகம் என்று டில்லி வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. விஷயம் அதுவல்ல, சி.பி.ஐ., விசாரணை தான் முக்கிய காரணம் என்கின்றன காங்கிரஸ் - தி.மு.க., வட்டாரங்கள். குடும்ப உறுப்பினர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை உடனடியாக தொடங்கக் கூடாது. தேர்தலுக்கு பிறகு தான் தொடர வேண்டும்' என்று தி.மு.க., தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் பார்வையில் இந்த விசாரணை நடப்பதால், எதுவும் செய்ய முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. போபர்ஸ் வழக்கை மட்டும் எப்படி சி.பி.ஐ., மூடிவிட்டது என்ற கேள்வி தி.மு.க., தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. கடைசியில், குடும்ப உறுப்பினரை சி.பி.ஐ., விசாரித்தாலும், குற்றப் பத்திரிகையில் அந்த உறுப்பினர்கள் பெயர் வரக்கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. முடிந்த வரை பார்க்கலாம் என்று மட்டும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்., வேண்டாம் - தி.மு.க., கோஷ்டி : செவ்வாய் காலை தி.மு.க., தலைவர் மற்றும் வேறு சில தலைவர்களுடன் போனிலேயே ஆலோசனை நடத்தினார் அழகிரி. எதற்கு காங்கிரஸ் கூட்டணி? பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கொங்கு கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவை போதும். நம்முடைய நலத் திட்டங்கள் மூலமாகவே ஆட்சியை பிடித்து விடலாம் என்று ஒரு கோஷ்டி சொன்னது. இதற்கு ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்தார். விஷயத்தை புரிந்து கொண்ட அழகிரி, கருணாநிதிக்கு போன் செய்து, நமது கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வது அவசியம் என்று வற்புறுத்தி அனுமதி வாங்கிவிட்டார். மீண்டும் சோனியாவை சந்தித்து, தி.மு.க.,வின் முடிவை தெரிவித்து 63 தொகுதிகள் தர ஒத்துக் கொண்ட விஷயத்தை தெரிவித்தார் அழகிரி.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.