"கூட்டணி தர்மத்தை காக்கும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணல், கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளன்று 10 மாவட்டங்களுக்கு முடிந்துள்ள நிலையில், நேற்று, இரண்டாம் நாள் நேர்காணல் காலை 8 மணியளவில் துவங்கியது.தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுச்சேரி, சென்னை ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 77 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்கள், தங்களது தொண்டர்கள் படையுடன் வந்திருந்தனர்.கட்சித் தலைவர் விஜயகாந்த், மாநில இளைஞரணி செயலர் சுதீஷ் உட்பட பல பொறுப்பாளர்கள் விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணலை நடத்தினர். முதல் நாளன்று நேர்காணல் இரவு 11 மணி வரை நீடித்ததால், நேற்றைய நேர்காணல் விரைவாகவும், விறுவிறுப்பாகவும் நடந்தது.ஒவ்வொரு தொதியில் இருந்தும், விருப்ப மனுதாரர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவினராக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் கட்சி பொறுப்பாளர்கள் நேரடியாக கேள்விகளைக் கேட்டனர். குறிப்பாக தொகுதியில் கட்சியின் பலம் எந்தளவிற்கு இருக்கிறது; தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய தயாராக இருக்கிறீர்கள்; கடந்த காலங்களில் கட்சியில் உங்களது பங்கு என்ன உள்ளிட்ட பல கேள்விகளை தொடுத்துள்ளனர்.
நேர்காணல் குறித்து விருப்ப மனுதாரர்கள் கூறியதாவது:தொகுதியில் கட்சியின் வெற்றி வாய்ப்பை கேட்டறிந்தனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையிலும், கூட்டணி தர்மத்தை காக்கும் வகையில், தேர்தல் பணியாற்ற வேண்டுமென "கேப்டன்' அறிவுறுத்தினார். மேலும், தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால், குலதெய்வத்தை கும்பிட்டு விட்டு, களப்பணியில் தீவிரமாக இறங்குங்கள் எனவும் கூறினார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்றே கடைசி: கடந்த இரண்டு நாட்களாக 21 மாவட்டங்களில் இருந்து 156 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் நேர்காணல் முடிந்துள்ளது. இந்நிலையில், கடைசி நாளான இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த 78 தொகுதிகளுடன் நேர்காணல் முடிவடைகிறது.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.